ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை சேகரிப்பு பற்றிய அறிவித்தல்

கோவிட் 19 பரவுவதைக் குறைப்பதற்காக, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் பின்வரும் முறையில் பங்களிப்புத்  தொகைகளை சேகரிப்பதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1. காசோலைகளின் சேகரிப்பு: (ETF தலைமை அலுவலகம்) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை, 19-23 மாடிகள், “மெஹவர பியஸ” த.பெ. 807, கிருள வீதி, நாராஹேன்பிட்ட, கொழும்பு 05, இலங்கை. நுழைவாயிலின் பிரதான வாயிலில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு drop box வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து பங்களிப்புத் தொகை செலுத்தும் காசோலைகளை நிரப்பப்பட்ட பணம் செலுத்தும் படிவத்துடன் (R1/R4) கடித உறையில் வைத்து பெட்டியில் இடுமாறு தொழில் வழங்குநர்கள் வேண்டப்படுகின்றனர். 2. 1.       இலங்கை வங்கி ஊடாக பணப் பரிமாற்றம் (R1 படிவத்தினால் பணம் அனுப்பும் தொழில்வழங்குநர்களுக்கு மாத்திரம்) இலங்கை வங்கி ஊடக ஊ.ந.பொ.நி. பங்களிப்புத் தொகைகளை செலுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம். தயவு செய்து பின்வரும் தகவல்களைப்  பின்பற்றவும்
பயனாளர் பெயர் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
வங்கியின் பெயர் இலங்கை வங்கி
வங்கிக் கிளை கோபரேட்
A/C No : 0000001839
முக்கியம்- இலங்கை வங்கி ஊடாக ஊ.ந.பொ.நி. பங்களிப்புத் தொகை செலுத்தும் போது உரிய பணம் அனுப்பும் படிவத்தை (R1)   ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் வழங்குநர் தகவல்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் வேண்டும்.  

மின்னஞ்சல் முகவரி concoldiv@etfb.lk மேலதிக தகவல்கள் தொ.இல. 071 8046319 / 071 3860010 / 071 5115119

பிரதி பொது முகாமையாளர் (சேகரிப்பு மற்றும் தொழில்வழங்குநர் உறவுகள்)
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை,
19-23 மாடிகள்,
“மெஹவர பியஸ”
த.பெ. 807, கிருள வீதி, நாராஹேன்பிட்ட,
கொழும்பு 05,
இலங்கை.s
Facebook
Twitter
LinkedIn