ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை தனது அங்கத்தவர்களுக்கும் அதேபோன்று தொழில் வழங்குநர்களுக்கும் சேவையாற்றுவதற்காக நாடுபூராவும் 19 கிளைகளைக் கொண்டிருக்கின்றது.
இந்த கிளைகளுக்கு செலுத்தப்படாத கொடுப்பனவுகள், குறைந்த கொடுப்பனவுகள் மற்றும் காலதாமதமான கொடுப்பனவுகள் தொடர்பில் ஏற்புடைய தொழில் வழங்குநர்களுக்கு எதிராக பணியாளர்கள் முறைப்பாடுகளைச் செய்ய முடியும்
எந்தவொரு அங்கத்தவருக்கும் தமது விண்ணப்பங்களைக் கையளிக்கவும், அவர்களது அங்கத்துவ மீதியைப் பரிசீலிக்கவும் முடியுமென்பதுடன் ஊ.ந.பொ.நி தொடர்பான எந்த தகவலையும் அல்லது விசாரணையையும் எந்தவொரு கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்துக் கிளைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
தொழில்வழங்குநர்களும் ஊ.ந.பொ.நியத்திற்கான பங்களிப்புத் தொகைகள், தண்டப் பணம், அரையாண்டு அறிக்கைகள் போன்ற அல்லது ஏதேனும் தகவல்களையும் பெறமுடியும்.
தொழில்தருநர்கள் அவர்களது பிந்திய கொடுப்பனவுகளை கிளைகளுக்குக் கையளிக்க முடியும்.
கிளைகள் அவற்றினது உரிய பிரதேசங்களுக்குள் ஊ.ந.பொ.நி தொழில்தருநர் பிரதான கோப்பு தொடர்பில் உரிய அனைத்து தகவலையும் கையாள்கின்றன.
அங்கத்தவர்கள் கம்பஹா, கண்டி,மாத்தறை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய கிளைகளினூடாக சாதாரண கோரல்கள்களுக்கான கொடுப்பனவுகளைப் பெறமுடியும்.