சுயதொழிலில் ஈடுபட்டுள்ள அங்கத்தவர்கள்

அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் மற்றும் தனியார் துறையிலுள்ள ஊழியர்கள் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் அங்கத்துவத்தைப் பெறுவதற்குத் தேவைப்படுத்தப்படுவதுடன், இவர்களினால் அனுபவிக்கப்படுகின்ற சிறப்புரிமைகள் மற்றும் நன்மைகளை சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர் களுக்கும் வழங்கும் நோக்குடன் அதேபோன்று சுயதொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் நியதிகளின்படி இந்த நிதியத்தில் அங்கத்துவத்தைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வர்களாகச் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் 1988 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கமாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தப்பட்டது) எனத் திருத்தப் படுகையில் குடிபெயர் வேலையாளர் சேவை யிலுள்ள பணியாளர்கள் அதனது 6 ஆம் பிரிவின் கீழ் இந்த நிதியத்தின் அங்கத்துவத்தைப் பெறுகின்றனர். ஆகவே,வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பணியாளர்களும் அங்கத்துவத்தைப் பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர்.

“சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்” என்பதற்கு குறிப்பிட்ட வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆயினும்  சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கைவினைஞர்கள்

ஆடை, இரும்பு, தங்க ஆபரணங்கள், செப்புக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், பிரம்புக் கைத்தொழில், ஓடு மற்றும் செங்கல் கைத்தொழில், சிற்ப வேலைப் பேன்றன...

தொழில் முயற்சியாளர்கள்

சில்லரை வியாபாரம், நடைபாதை வியாபாரம், நாள் சந்தை

போக்குவரத்து

முச்சக்கர வண்டி, தனியார் பேரூந்து, பாடசாலை வேன்

மீன்பிடிக் கைத்தொழில் ஈடுபட்டுள்ளோர்

மீன்பிடிக் கைத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளோர்

தொழில்வல்லுநர்கள்

சட்டத்தரணிகள், கணக்காளர்கள்

ஆயினும், ஓய்வூதியத்தைப் பெறுகின்ற அரச அலுவலர், 18 வயதிற்கும் குறைந்த நபர் இத் திட்டத்தின்அங்கத்கத்துவத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள். அங்கத்துவத்தைப் பெறுவதற்கு ஆகக்கூடிய வயதெல்லை இல்லாதபோதிலும்,70 வயதினையுடைய அல்லது அதற்கு மேலுள்ள அங்கத்தவர் நலத்திட்டங்களுக்கு உரிமையற்றவர்கள். பங்களிப்புத் தொகைகள் தொடர்பில் வருடாந்த வட்டி மற்றும் பங்கிலாபங்களுக்கு மட்டுமே அவர்கள் உரித்துடையவர்கள்.

பங்களிப்புத் தொகை கொடுப்பனவு

  • குடிபெயர் வேலையாளர்கள்

    ☛ அங்கத்தவர் கணக்கொன்றினைப் பேணுகின்றவிடத்து நிலையியற் கட்ளையினூடாக உரிய மாதத்திற்கான பங்களிப்புத் தொகையினை மாற்றுவதற்கு வங்கி மூலமாக ஒழுங்குபடுத்துதல்.

    ☛ அங்கத்தவரின் இலங்கையிலுள்ள உறவினர் ஒருவரினூடாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை என்ற பெயருக்கு பணமாக அல்லது காசோலையாக தலைமை அலுவலகத்திற்கு உதவுதொகையினை அனுப்புவதற்கு ஒழுங்கினைச் செய்தல். மேலுள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை NIC இலக்கத்தை சபைக்கு அறிவிப்பது கட்டாயமானதாகும்.

  • சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்

    ☛ கொடுப்பனவுகள், மக்கள் வங்கியின் எந்த கிளையினூடாகவும் எமது நடைமுறைக் கணக்கு இலக்கமான 119100180000287 இற்கு பணமாகச் செலுத்த முடியும். பணத்தினைச் செலுத்தும்போது உங்களது அடையாள அட்டையையும் , உங்களது பெயரையும் எழுதுவது கட்டாயமானதாகும்.

    ☛ ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பெயருக்கு எழுதப்பட்ட கோடிட்டப்பட்ட காசோலையினை தலைமை அலுவலகத்திலுள்ள சுயதொழில் பிரிவில் தபால் மூலம் அல்லது நேரடியாக கையளிக்கலாம் அல்லது இந்தப் பிரிவில் பணமாகச் செலுத்துதல் வேண்டும்.

    ☛ கொடுப்பனவு அலுவலகமாக கொழும்பு தொழில் செயலக தபால் அலுவலகத்திற் குரிய காசுக்கட்டளை மூலம்.

    ☛ அருகாமையிலுள்ள பிராந்திய அலுவலகங்கள் அல்லது மாவட்ட அலுவலகம் அல்லது எமது வெளிக்கள அலுவலர்களிடம் பணமாகச் செலுத்துவதன் மூலம்.

    ☛ உங்களது வங்கிக்கு நிலையியற் கட்ளையை வழங்குவதனூடாக கொடுப்பன வினைச் செய்ய முடியும். மேலே ii,iii,iv,v, இலுள்ள அனைத்துச் சந்தர்பங்களிலும் பெயர் மற்றும் அங்கத்துவ இலக்கத்தை சபைக்குத் தெரிவித்தல் கட்டாயமானதாகும்.

    ☛ தலைமை அலுவலக சுயதொழில் பிரிவுடன் இணைந்துள்ள சங்கங்கள் எமது கொமர்ஷல் வங்கியின் நடைமுறைக் கணக்கு இலக்கத்திற்கு 1220003370 எந்வொரு கொமர்ஷல் வங்கியிலும் பணத்தை வரவு வைக்கலாம் என்பதுடன் தொலைநகல் மூலம் பணம் வரவில் வைக்கப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கிக் கிளையின் பெயர் உள்ளடங்கலாக அங்கத்தவர்களின் பெயர்கள், ஒவ்வொரு அங்கத்தவருக்கும் உரிய பங்களிப்புத்தொகை, அங்கத்துவ இலக்கம் என்பவற்றை அங்கத்துவ இலக்கம் என்பவற்றை எமக்கு தொலைநகல் மூலம் தெருவித்தல் வேண்டும். இதற்கு மேலதிகமாக இந்த விபரங்கள் தபாலில் எமக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

அங்கத்துவத்தை நிறுத்துதல்

எந்தவொரு அங்கத்தவரும் அங்கத்துவத்தை முடிவுறுத்துவதற்காக  முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை  (சுயதொழிலில் ஈடுபட்டுள்ள அங்கத்தவர்களுக்கு SE-D படிவம் மற்றும் குடிபெயர் வேலையாளர் அங்கத்தவர்களுக்கு MW-D படிவம்) சமர்ப்பிப்பதன் மூலம் அவரினால் மீதியினைக் கோருகின்றபோது (வட்டி மற்றும் பங்கிலாபங்களுடன் மொத்த வைப்புப் பணம்) எந்த நேரத்திலும் அங்கத்தவராக இருப்பதிலிருந்து முடிவுறுத்துவதற்கு முடியும்.
அங்கத்துவத்திலிருந்து விலகுகின்ற நபர் எதிர்காலத்தில் புதிய அங்கத்துவ இலக்கத்தின் கீழ் மீளவும் உள்வருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.”குடிபெயர் வேலையாளர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கான கட்டாய சேமிப்பினை ஊக்குவிப்பதே” எமது எண்ணக்கருவாகும்.

அங்கத்துவத்தைப் பெறுதலும், அங்கத்துவ பங்களிப்புத் தொகையைச் செலுத்துதலும்

சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் SE-A விண்ணப்பப்படிவத்தினைப் பூரணயமாக நிரப்பி மற்றும் குடிபெயர் வேலையாளர்கள் MW-A விண்ணப்பப்படிவத்தினைப் பூரணமாக நிரப்பி தலைமை  அலுவலகத்திற்கு, பிரதேச  அலுவலகங்களுக்கு, மாவட்ட அலுவலகம் அல்லது வெளிக்கள அலுவலர்களுக்கு அங்கத்துவத்திற்கான பங்களிப்புத்தொகையுடன் அனுப்புவதன் மூலமும்  அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். தமது விண்ணப்பங்களை மின்னஞ்சல் செய்கின்ற விண்ணப்பதாரிகள் தமது முதல் மாத பங்களிப்புத்தொகையினை பின்வருகின்ற முகவரிக்கு அனுப்புவதற்கு ஒழுங்குகள் செய்தல் வேண்டும்.

அங்கத்துவத்தைப் பெற்ற ஒவ்வொரு அங்கத்தவருக்கும் காலதாமதமின்றி அங்கத்துவ சான்றிதழ் வழங்கப்படும்.

பங்களிப்புத் தொகைகள் மற்றும் கொடுப்பனவு முறை

நலன்கள், வட்டி மற்றும் பங்கிலாபங்கள்

ஆண்டின் இறுதியில் வருடாந்த வட்டி மற்றும் பங்கிலாபம் ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தவரின் கணக்கிற்கும் வரவு வைக்கப்படும். வருடாந்த வட்டி, அவரது கணக்கு மீதி போன்ற விபரங்களைக் கொண்டிருக்கின்ற அங்கத்துவ கணக்கு விபரக்கூற்று, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அங்கத்தவருக்கு வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகைக் கொடுப்பனவினை தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அல்லது  குறித்த ஆண்டு காலப்பகுதியில் 5 மாதங்களுக்கு இடைஇடையே செலுத்துவதற்கு எந்தவொரு அங்கத்தவரும் தவறுவாராயின் உரிய ஆண்டுக்கான வட்டி மற்றும் பங்கிலாபத்திற்கான  அவரது உரித்துடைமையை இழப்பர்.
நலன்களுக்கான வேண்டுகோள்,உரிய படிவத்தனை சுயதொழில் பிரிவில் வழங்கலாம், பிராந்திய அலுவலகங்களில் அல்லது மாவட்ட அலுவலகங்களில் அல்லது   வெளிக்கள அலுவலர்களினூடாக கையளிக்கலாம். நன்மைகளுக்கான கொடுப்பனவு நன்மைகள் நிருவாகப் பிரிவினால் விதிக்கப்படும் நிபந்தனைக்குட்பட்ட தாகும்.
தற்போது நடைமுறையிலுள்ள நன்மைகளாவன, தன்னியக்கமான வாழ்க்கைக் காப்புறுதி (ஆகக்கூடிய தொகை  100,000/- ரூபா உச்சமாக), நிரந்தர மானதும் முழுவதுமான இயலமைக்கான நன்மைகள் ( 200,000/- ரூபா உச்சமாக), இருதய சிகிச்சைக்கான நிதி உதவி (ஆகக்கூடிய தொகை  300,000/- ரூபா), சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான நிதி உதவி   (300,000/- ரூபா),கண்ணில் (Intra Ocular Lens) வில்லைபொருத்துவதற்கான பணத்தை மீளப்பெறுவதற்கு  (ஒவ்வொன்றுக்கும் தலா 15,000/- ரூபா) என்பவையாகும்.ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 9000 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா 15,000/- வழங்கப்படும்.வைத்தியசலையில் தங்கியிருந் தமைக்கான மருத்துவ காப்புறுதித் திட்டம் வருடாந்தம் ஆகக்கூடியது 25,000/-. ரூபாவிற்மைவானதாகும்.அங்கத்துவ காலப்பகுதியில் பெறக்கூடிய ஆகக்கூடிய இந்தத் தொகை 50,000/-,ரூபாவாகும்.

செயற்பாடற்ற அங்கத்தவர்களைச் செயற்படச்செய்தல்

அங்கத்தவரொருவர் தொடர்பில் அண்மைய கொடுப்பனவுகள் நிலுவையாகவுள்ள போது அவர் செயற்பாடற்ற அங்கத்தவராகக் கருதப்படுகின்றார்.அத்தகைய செயற்பாடற்ற அங்கத்தவர் செலுத்த வேண்டிய நிலுவையினைச் செலுத்துவதன் மூலம் செயற்பாடுடைய நிலையினைப் பெற முடியும்..