இலங்கை நிதி அமைச்சு

விடயப் பரப்பு

பேரினப் பொருளாதாரக் கொள்கைகள், வருடாந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்கள், பொது நிதி முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேமிப்புக்கள் மற்றும் முதலீடுகள், பொதுக் கடன்கள், வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நடவடிக்கைகள், சர்வதேச நிதி ஒத்துழைப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை இயக்குதல் என்பவற்றுக்கான பொறுப்புகள்.

விடயங்கள் மற்றும் செயற்பாடுகள்

  • பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் பிரகாரம் உரிய இராஜாங்க அமைச்சுக்களுக்கு நிதியுடன் தொடர்புடைய கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல், தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அரசாங்க முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களை வடிவமைத்தல், செயல்படுத்துதல் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய "மக்கள் மையப் பொருளாதாரத்தை" உருவாக்குவதற்காக பின்வரும் துறைகளில் திணைக்களங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள விடயப் பரப்புக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

  • வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஊடாக அனைத்து அமைச்சுக்களுடனும் ஒருங்கிணைந்து நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வசதிகளை வழங்குதல்.

விசேட முன்னுரிமைகள்