வரவேற்கிறோம் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊ.ந.பொ. நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

இலங்கைப் பிரஜைகளின் சமூகப் பாதுகாப்பு நிதியம் இது உங்களுடைய சொத்து நாம் உங்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்போம்

வரவேற்கிறோம்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊ.ந.பொ. நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இந்த நிதியமானது, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினால் நிருவகிக்கப்படுவதுடன், தற்போது ஊ.ந.பொ.நி சபை நிதி,பொருளாதாரம் மற்றும்  கொள்கை  அபிவிருத்தி அமைச்சுக்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ அவர்களின் கீழ் இயங்கிவருகின்றது. இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் கௌரவ அமைச்சரினால் வர்த்மானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு அந்தக் கட்டளைளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரச மற்றும் தனியார் துறையின் ஏதேனும் வகுப்பு அல்லது வகைக்குரிய அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து தொழில் முயற்சிகளுக்கும் ஏற்புடையதாகும்.

சுயவேலை வாய்ப்பிலீடுபட்டுள்ளவர்கள் மற்றும் குடிபெயர் வேலையாளர்கள் தமது சொந்த விருப்பின் பேரில் நிதியத்திற்கு பங்களிப்புத்தொகை செலுத்தவும் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். நிதியத்தின் தற்போதைய செயற்பாடுடைய அங்கத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் என்பதுடன், 79,000 தொழில்வழங்குநர்களையும் உள்ளடக்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு நிதியத்திடமுள்ள பெறுமதி 406 பில்லியன்ரூபாவாகும். ஊ,ந,பொ.நி. சபையின் செயற்பாடுகளை பரவலாக்கம் செய்வதற்கும் தமது அங்கத்தவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஊ,ந,பொ.நி.சபை 1995 ஆம் ஆண்டு கிளை வலைப்பின்னலொன்றை அறிமுகப்படுத்தியது.