அரசாங்க பிணைப் பொறுப்பில் வைக்கப்படுகின்ற ஊ.ந.பொ.நி. முதலீடுகளின் 91% இற்கும் அதிகமானவை தற்போதைய சந்தை நிலைமைகளில் உயர் வருவாய் உத்தரவாதத்தை வழங்குகின்றன. நியதிச்சட்டமுறையாக, சபை அதனது அனைத்து அங்கத்தவர்களுக்கும் வருடாந்த பங்கிலாபம் + வட்டி என்பவற்றை வெளிப்படுத்துதல் வேண்டும் . அது 2019 ஆம் ஆண்டு 8% ஆக காணப்பட்டது
சபை 19 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கொழும்பு,கம்பஹா , கண்டி , இரத்தினபுரி,களுத்துறை,காலி,மாத்தறை,குருணாகல்,அனுராதபுரம்,பதுளை, கேகாலை, ஹம்பாந்தோட்டை , அம்பாறை,யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதான நகரங்களில் பிராந்திய அலுவலக வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. இது உரிய பிரதேசங்களில் சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளையும் வருமான அதிகரிப்பினையும் மேலும் பலப்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் பிரதான புத்தாக்கங்கள் பின்வருமாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- அங்கத்தவர்களின் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான போதிய ஆற்றலுடன் பிரதான கணனி முறைமை தரமுயர்த்தப்பட்டுள்ளது.
- தலைமை அலுவலக கணனி முறைமையுடன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் நேரடியாக தொழிற்படுவதற்காக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
- கோரல்களுக்கான கொடுப்பனவு சிறந்த அங்கத்துவ நட்புரீதியான சேவையை வழங்குவதற்காக 06 பிராந்திய அலுவலகங்களுக்கு (கம்பஹா, கண்டி, குருணாகல்,மாத்தறை, பதுளை மற்றும் நுவரெலியா) பரவலாக்கப்பட்டுள்ளதுடன், இந்த வசதி எதிர்காலத்தில் ஏனைய பிராந்திய அலுவலகங்களுக்கும் விரிவிபடுத்தப்படவுள்ளது
- தொழில்தருநர்கள் நேரடியாக பங்களிப்புத் தொகைகளைச் செலுத்துவதற்கான வசதி 2008 செப்டம்பர் மாதத்திலிருந்து செயற்பாட்டிலிருப்பதுடன், இது, உதவுதொகையைப் பெறுவதில் பிரதானமான முன்னேற்றமாக விளங்குவதுடன் இச்செயல்முறை சிறந்த தொழில்வழங்குநர்களுக்கு வசதியாக அமையும்.
- 2010 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துக் கணக்குகளும் தொடரறா (online) சேவையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அங்கத்தவர்களின் கணக்குகள் நாளது வரைப்படுத்தப்படுகின்றன.
நிதியத்திற்கு அதிகமான சுயதொழில் அங்கத்தவர்களைச் சேர்ப்பதன் மூலம் சுவேலைவாய்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சபை தீவிரமாக அவதானத்தைச் செலுத்துகின்றது. இது தொடர்பில், சுயவேலைவாய்ப்பை மேம்படுத்தும் அலுவலர்கள் பிரதான மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான இலக்கு குழுமங்களாக சமுர்த்தி பெறுவோர், பாற்பண்ணையாளர், பத்திரிகை முகவர்கள், லொத்தர் முகவர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் காணப்படுகின்றனர்.
ஊ.ந.பெ.நி. சபைக்கு தற்போதும் கொழும்பில் தனக்கென சொந்தமான கட்டடத்தொகுதி இல்லாதிருப்பதுடன் நாரஹென்பிட்டி, நாவல பிரதேசங்களில் 04 வாடகை அலுவலகங்களில் செயற்படுகின்றது. ஊ.ந.பொ.நி மற்றும் ஊ.சே.நி (தொழில்திணைக்களம்), ஊ.ந.நிதியத்தின் (மத்திய வங்கி) ஒரு பகுதி என்பவற்றை ‘’ ஒரேதடவையில் அனைத்து சேவைகளையும்” பெறக்கூடிய நவீன கட்டடத் தொகுதி அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குகியுள்ளது. இந்த கட்டடத்தின் நிருமாணம் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
ஊ.ந.பொ.நி. சொந்தமாகக் கொண்டிருக்கின்ற பெறுமதிவாய்ந்த ஆதனமான கொழும்பு 02, நவம் மாவத்தையிலுள்ள தற்போது வாகனத் தரிப்பிடமாகப் பயன்படுத்தப்படுகின்ற 2 1/2 ஏக்கர் மூலம் மாதாந்தம் 1.5 மில்லியன் ரூபா பெறப்படுகின்றது. இந்த ஆதனத்தை வர்த்தக இடமாகவிருத்தி செய்வதற்கான இணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான சாத்தியப்பாடு கவனத்தில் கொள்ளப்படுகின்றது.