Search
Search
Search

உதவுதொகைகளின் கொடுப்பனவு

தொழில் வழங்குநர்கள் இரண்டு வகையினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர்

 

நிதி முகாமையாளர், (உதவுதொகை  சேகரிப்பு)
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை,
22 மாடிகள்,
“மெஹவர பியஸ”
த.பெ. 807, கிருள வீதி,
நாராஹேன்பிட்ட,
கொழும்பு 05,

மிக முக்கியமானது

மாதாந்த பங்களிப்புத் தொகைகள் அடுத்து வரும் மாதத்தின் இறுதி வேலை நாளன்று அல்லது அதற்கு முன்னர் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவைத்தல் வேண்டும்.

சாதாரண முறையில் (பணம், காசுக் கட்டளைகள், காசோலைகள் என்பவற்றை செலுத்தும் முறை)

சகல கொடுப்பனவுகளும் பணம் அனுப்பும் (R1 அல்லது R4 படிவம்) படிவங்களில் இரு பிரதிகளில் சரியாக நிரப்பப்படல் வேண்டும். படிவத்தின் ஒரு பிரதி பணம் அனுப்பல் படிவம் கிடைத்ததை ஏற்றுக்கொண்ட அறிவித்தலுடன் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினால் மீண்டும் தொழில் வழங்குநருக்கு அனுப்பிவைக்கப்படும்.

  1. சகல கசோலைகளும் / வங்கிக் கட்டளைகளும் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை” எனும் பெயரில் வரையப்படல் வேண்டும். காசுக்கட்டளைகள் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை” எனும் பெயருக்கும் காசுக் கட்டளை மாற்றப்படும் தபால் நிலையம் “பிரதான தபால் அலுவலகம்” என குறிப்பிடப்படல் வேண்டும்.
  2. காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகளை நாராஹேன்பிட்டயில் அமைந்துள்ள ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பிரதான அலுவலகத்திலும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் கொழும்பு கோட்டை அலுவலகத்திலும் செலுத்த முடியும். அத்தோடு கம்பஹா, கண்டி, மாத்தறை, குருநாகல், காலி, இரத்திணபுரி, அனுராதபுரம், களுத்துறை, ஹட்டன், பதுளை, கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை போன்ற பிராந்திய அலுவலகங்களிலும் செலுத்த முடியும்.
  3. காசாக செலுத்தப்படும் கொடுப்பனவுகள் டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளை, புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கி மேல்தரக் கிளை மற்றும் நாராஹேன்பிட்ட மக்கள் வங்கிக் கிளை என்பவற்றில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  4. கசோலையில் அல்லது காசுக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை பணம் அனுப்பும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையுடன் ஒத்திருத்தல் வேண்டும்.
  5. நிலுவை கொடுப்பனவுகளை செலுத்தும் போது ஒவ்வொரு மாதத்திற்கும் அவற்றுக்கென தனியான பணம் அனுப்பும் படிவங்களை உபயோகிக்கவும். அவ்வாறில்லை எனின் மொத்த தொகையை பிரித்துக் காட்டும் தனியான அட்டவணையொன்றை இணைக்கவும்.
  6. R1 பணம் அனுப்பும் படிவங்களை உபயோகிக்கும் தொழில் வழங்குநர்கள் எந்தவொரு மாதத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை 15 ஐ விட குறையும் சந்தர்ப்பத்திலும் வழமையான ஒழுங்கு முறையை கட்டாயமாக பின்பற்றவும். சகல அரசாங்க மற்றும் பகுதியளவு அரசாங்க நிறுவனங்களும் கொடுப்பனவு செலுத்துவதற்கு கட்டாயமாக R1 பணம் அனுப்பும் படிவத்தினை பயன்படுத்தல் வேண்டும். தனிப்பட்ட அங்கத்துவ பங்களிப்பு தகவல்கள் படிவம் II இல் அரையாண்டுக்கு ஒரு முறை அனுப்பப்படல் வேண்டும். தொலைபேசி எண் +94 11 7747259

நிறுவனத்தின் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 ஐ விட அதிகரித்ததன் காரணமாக தொழில் வழங்குநர்கள் பணம் அனுப்பும் படிவம் R4 இலிருந்து R1 க்கு மாறுவதற்கு விரும்பினால் பணம் அனுப்பும் படிவத்தில் மாற்றம் செய்வதற்கு முன்னர் தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு அறிவித்தல் வேண்டும். (தொ.இ. +94 11 7747264)

முக்கியமானது

தொழில் வழங்குநர்கள் தனது நிறுவனத்தில் 15 விட கூடிய எண்ணிக்கையான ஊழியர்கள் பணியாற்றினால் அவர்களது பங்களிப்புத் தொகைகளை R1 பணம் அனுப்பும் படிவத்திலும் ஊழியர்களது எண்ணிக்கை 15 விட குறைவாக உள்ள போது R4 படிவத்திலும்பங்களிப்புத் தொகைகளை அனுப்புதல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க.ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை – +94 11 7747260+94 11 7747263

இலத்திரனியல் முறை ( இணையத்தளம் ஊடான கொடுப்பனவு)

சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு ஊ.ந.பொ.நி சபை தொடரறா (On line) கொடுப்பனவு திட்டமொன்றை அறிமுகம் செய்கின்றது. அது மிகவும் துரிதமானதும் மிகவும் வசதியானதுமான ஒரு கொடுப்பனவு முறையாகும்.

  1. இணையத்தளம் ஊடாக தொழில் வழங்குநர்கள் தங்களது பங்களிப்பு தொகையை ஊ.ந.பொ.நி சபைக்கு செலுத்த முடியும். அத்தோடு பங்களிப்புத் தொகை பற்றிய தகவல்களை 24 மணி நேரமும் தமது அலுவலகத்திலிருந்தோ அல்லது எத்தகைய ஒரு பிரதேசத்திலிருந்தோ பதிவேற்றம் செய்யலாம்.
  2. தற்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  3. ஏற்புடைய வங்கியின் பாவனையாளர் சேவை உத்தியோகத்தரை தொடர்புகொண்டு ஊ.ந.பொ.நி. சபையின் “e” வங்கி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

Bank of Ceylon

Commercial Bank

Peoples Bank

Sampath Bank

Ceylan Bank

Nations Trust Bank

D F C C Bank

Hatton National Bank

National Development Bank

  1. தரவேற்றுவதற்கு தேவையான காந்த ஊடாககோவைப்படிவம்II / R4 (அங்கத்தவர் தகவல்கள்) இணையத்தளம் ஊடாக படிவம் II / R4 அங்கத்தவர் தகவல் தரவுகள் தரப்பட்டுள்ளன. கொடுப்பனவு செய்வதற்கு முன்னர் தயவு செய்து பதிவேற்றம் செய்யும் ஊழியரின் தகவல்களை ஊ.ந.பொ.நி. சபை முகாமையாளரிடமிருந்து (அங்கத்தவர் கணக்கு – பாரிய வகை) 011-2369596 தொலைபேசி எண் ஊடாக பெற்றுக்கொள்ளவும்.
  2. தண்டப் பணத்தைச் செலுத்தும் போது தண்டப் பண அறிவித்தல் இலக்கத்தையும் உள்ளடக்குவது கட்டாயமானதாகும்.
  3. தயவுசெய்து ஏற்றுக்கொண்டமைக்கான ரசீதை கணனியிலிருந்து பெற்றுக்கொள்ளவும். இணையத்தளம் ஊடாக செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் ரசீதுகள் விநியோகிக்கப்பட மாட்டாது.

தண்டப்பணம் / அறவீடுகள்

காலதாமத கொடுப்பனவுகளுக்கு (கணிக்கப்பட்ட பங்களிப்புத் தொகையிலும் பார்க்க செலுத்திய தொகை குறைவானதாகவிருக்கும்போது முழுத் தொகைக்கு குறைவாக கொடுப்பனவு செய்யப்பட்ட நாட்களின் எண்ணிக்கைக்கமைவாக தண்டப்பணம் சேர்க்கப்படும்.

தாமதித்து கிடைக்கப்பெறும் கொடுப்பனவுகள் பங்களிப்புத் தொகை மீது செலுத்த வேண்டிய தண்டப் பணம்
10 நாட்களுக்கு மேற்படாத தாமதம்
5%
11 நாள் தொடக்கம் 01 மாத கால தாமதம்
15%
01 மாதம் முதல் 03 மாத தாமதம்
20%
03 மாதம் முதல் 06 மாத தாமதம்
30%
06 மாதம் முதல் 12 மாத தாமதம்
40%
12 மாதங்களுக்கு மேல்
50%

காலதாமதமாக கிடைக்கப்பெறும் அறிக்கைகள் (படிவம் II)

அனுப்பும் படிவம் R1 இன் கீழ் ஊ.ந.பொ.நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்துவதற்கு கடப்பாடுள்ள தொழில் வழங்குநர்கள் பின்வரும் வகையில் ஒவ்வொரு மாதம் தொடர்பிலும் அவர்களின் கீழுள்ள ஊழியர்கள் சார்பில் செய்த பங்களிப்புத் தொகைகளின் விபரங்களுடன் அரை ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்

∎ 1 ஆவது அரை ஆண்டு அறிக்கை (சனவரி முதல் ஜூன் வரை) அதே ஆண்டின் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்.
∎ 2 ஆவது அரை ஆண்டு அறிக்கை (ஜூலை முதல் டிசம்பர் வரை) தொடர்ந்து வருகின்ற ஆண்டின் பெப்ரவரி 28 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்.

உரிய திகதிக்குப் பின்னர் மேற்படி அறிக்கைகளை சமர்ப்பிக்கின்ற தொழில் வழங்குநர்கள், முறையாக பூர்த்திசெய்யப்பட்டதும் சரியானதுமான அறிக்கை உரிய திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் சபைக்கு கிடைக்கப்பெற்ற இறுதித்திகதி முதல் ஒவ்வொரு பூர்த்தியான மாதத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கோ உரிய அறிக்கையினது பங்களிப்புத் தொகையிலிருந்து 1% ஐ தண்டப் பணமாக செலுத்துதல் வேண்டும்.

தொழில் வழங்குநர்களை ஊ.ந.பொ.நிதியத்தில் பதிவுசெய்தல்

ஊ.சே.நி போன்று பங்களிப்புத் தொகைகளை செலுத்துவதற்கு முன்னர் ஊ.ந.பொ.நி பதிவு நடைமுறை இல்லை.

  1. வர்த்தகமொன்றை ஆரம்பித்துள்ள தனது முதலாவது ஊழியரை ஆட்சேர்ப்புச் செய்துள்ள தொழில்வழங்குநர் ஒருவரது முதலாவதும் முக்கியமானதுமான கடப்பாடு யாதெனில் தொழில் ஆணையாளர் நாயகத்திடம் தனது வர்த்தகத்தைப் பதிவுசெய்தலும் தொழிலுக்கான பதிவு இலக்கத்தைப பெறுதலுமாகும்.
  2. தொழில் திணைக்களத்திலிருந்து பதிவு இலக்கத்தைப் பெற்ற பின்னர் தொழில்தருநர் எழுத்து மூலம் அல்லது தனிப்பட்ட ரீதியில் ஊ.ந.பொ.நிதியச் சபைக்கு வருகைத்தந்து ஊ.ந.பொ.நிதியத்திற்கு கொடு்பனவு செலுத்துவதற்கு உரிய படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  3. ஊ.ந.பொ.நி சபைக்கு ஒரு முறை முதலாவது பங்களிப்புத் தொகை கடைக்கப்பெறும் போது அந்த தொழில் வழங்குநரின் பெயர் ஊ.ந.பொ.நிதியத்தில் ” பங்களிப்புத் தொகை செலுத்துகின்ற தொழில் வழங்குநர் பட்டியலில்” பதிவுசெய்யப்படுவார்.
  4. அங்கீகரிக்கப்பட்ட சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்துகின்ற தொழில் வழங்குநர்களுக்கு ஊ.ந.பொ.நிதியத்திலிருந்து தனியான இலக்கம் வழங்கப்படும். தொழில் வழங்குநர்கள் மாதாந்தம் அனுப்பும் அனைத்து படிவங்களிலும், அரையாண்டு அறிக்கைகளிலும் ஏனைய கடிதங்களிலும் அந்த இலக்கைத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்

ஊ.ந.பொ.நிதியத்தில் பதவு செய்வதற்கென தனியான முறைமையொன்று இல்லை. ஆகவே,ஊ.ந.பொ.நிதியத்தில் அவர்களது கொடுப்பனவிற்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தொழில்வழங்குநர்களின் ஊ.சே.நி பதிவு இலக்கமே பயன்படுத்துகின்றது. ஊ.சே.நி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத புதிய தொழில்வழங்குநர்கள், தொழில் திணைக்களத்திலிருந்து ஊ.சே.நி பதிவு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்களது கொடுப்பனவுகளுக்காக ஊ.ந.பொ.நிதியத்தின் பங்களிப்புத் தொகை / சேகரிப்புப் பிரிவிடமிருந்து தற்காலிக இலக்கத்தைப் பெற முடியும்.

அங்கத்தவர்களுக்கு இலக்கங்களை ஒதுக்குதல்

ஊழியர்களுக்கு இலக்கங்களை குறித்தொதுக்குதல் தொழில்வழங்குநர்களின் பொறுப்பாகும்

  1. எவரேனும் ஊழியர் ஒருவருக்கு ஒரு முறை வழங்கப்பட்ட எண் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அந்தப் ஊழியர் அந்த நிறுவனத்தை விட்டு விலகிய போதிலும்கூட இன்னுமொருவருக்கு வழங்கப்படுதல் கூடாது.
  2. பதவி விலகிய ஊழியரொருவர் ஊ.ந.பொ.நிதியினை மீளப்பெற்றதன் பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்தில் இணைந்தால் அவருக்கு புதிய இலக்கம் வழங்கப்படுதல் வேண்டும்.

அங்கத்துவத்திற்கு தகைமையுடையவர்கள் யாவர்?

வேலையின் தன்மை ஏற்புடையதன்று. தொழிலின் வகை முக்கியமற்றது. அந்த ஊழியர்கள் நிரந்தர, தற்காலிக, பயிலுநர், அமய மற்றும் முறை மாற்று ஊழியர்களாகன இருக்குமிடத்து தொழில் வழங்குநரால் பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்.

  1. வேலையின் அடிப்படையில் பணியாற்றும் அதாவது துண்டு வீதம், ஒப்பந்த அடிப்படையில், தரகுப்பண அடிப்படையில் வேலை செய்கின்ற எத்தகைய ஊழியர்களும் அங்கத்துவத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

பொறுப்பைத் தவறிய தொழில்வழங்குநர்கள் மீதான சட்ட நடவடிக்கை

அதிகாரத்தை செயற்படுத்தும் மற்றும் வழக்குத்தொடுக்கும் அலுவலர்களினால் பொறுப்புக்களை தவறுகின்ற மற்றும் பங்களிப்புத் தொகை செலுத்தாத தொழில்வழங்குநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களினால் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்துவதற்கு கடப்பாடுள்ள ஒவ்வொரு தொழில்வழங்குநரும் நிதியத்திற்கு உரிய நேரத்திற்கு பங்களிப்புத் தொகைகளை வழங்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாத விடத்து அதிகாரத்தை செயற்படுத்தும் மற்றும் வழக்குத்தொடுக்கும் அலுவலர்களினால் இந்த பொறுப்பைத் தவறுகின்ற மற்றும் பங்களிப்புத் தொகை செலுத்தாத தொழில்வழங்குநர்களுக்கு எதிராக அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மேலதிக மிகை விதிப்புடன் கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பங்களிப்புத் தொகையினைக் குறைவாக கொடுப்பனவு செய்தல் அல்லது கொடுப்பனவினைச் செய்யாத சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக எந்தவொரு ஊழியருக்கும் சத்தியக்கடதாசியுடன் தவிசாளருக்கு, பொது முகாமையாளர் அல்லது பி.பொ.மு (E & RD) அல்லது எந்தவொரு பிரதேச வர்த்தக முகாமையாளருக்கும் எழுத்து மூலமான முறைப்பாட்டினைச் செய்யமுடியும். ஊழியர்கள் தமது தொழில் வழங்குநருக்கு எதிராக முன்வைக்கும் முறைப்பாடுகளை கடிதங்கள், மின்னஞ்சல் மூலம் அல்லது தனிப்பட்டரீதியில் ஊ.ந.பொ.நி அலுவலகங்களுக்கு செய்ய முடியும். ஊ.ந.பொ.நி சபையினால் விதிக்கப்படும் கட்டளைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்காத விடத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய தொழில்வழங்குநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.