தொழில் வழங்குநர் – பொதுவான வினாக்கள்

ஒவ்வொரு தொழில்வழங்குநரும் ஊ.ந.பொ.நி செலுத்த வேண்டுமா?

ஆம். அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் தவிர்ந்த அரச மற்றும் தனியார் துறையிலுள்ள அனைத்துத் தொழில்வழங்குநரும் அவர்களது  ஊழியர்கள் சார்பில் ஊ.ந.பெ.நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்துதல் வேண்டும்.

 

தொழில்வழங்குநர்கள் ஊ.ந.பொ.நி செலுத்தாது விதிவிலக்களிக்கப்படுகின்ற ஏதேனும் சந்தர்ப்பங்கள் உள்ளனவா?

ஆம்
உ.ம்
(அ)குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டுள்ள வர்த்தக முயற்சிகள்
(ஆ )பங்குதாரர்கள் / பணிப்பாளர்களை மட்டுமே பணியாளர்களாகக் கொண்டுள்ள கம்பனிகள்

 

ஊ.ந.பொ.நி பங்களிப்புத் தொகை வீதம் என்ன? தொழில்வழங்குநர்கள் பங்களிப்புத் தொகையினை மாதாந்தம் செலுத்த வேண்டுமா?

ஊ.ந.பொ.நி  பங்களிப்புத்தொகை வீதம் 3% ஆகும்.ஒவ்வொரு தொழில்வழங்குநரும் தமது ஊழியர்கள் தொடர்பில் மாதாந்தம்  பங்களிப்புத்தொகையினைச் செலுத்துதல் வேண்டும்.

தொழில்வழங்குநர் பின்வரும் ஆட்களுக்கு பங்களிப்புத்தொகை செலுத்துவதற்கு சட்டரீதியாகக் கட்டுப்பட்டவரா?

(அ)
தங்களது வரத்தகத்தில் ஈபட்டுள்ள ஓய்வூதியம் பெறும் ஆட்கள்
(ஆ)
பாடசாலை முடிவடைந்ததன் பின்னர் வேலை செய்கின்ற 14 வயதிற்கும் மேற்பட்ட மாணவர்கள்
(இ)
உங்களது கம்பனியில் வேலைசெய்கின்ற அதே நேரத்தில் பிறிதொரு இடத்திலும் தொழில்புரிகின்ற ஆட்கள்
(ஈ)
ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு மாறுகின்ற அல்லது குடிபெயர்கின்ற ஆட்கள்
(உ)
ஒப்பந்த வேலையாளர்கள்
(ஊ)
பணத்தினை மீளப்பெற்றுள்ள மற்றும் மீள பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஆட்கள்
(எ)
வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய ஊழியர்கள்
(ஏ)

அமைய / துண்டு வீத, பயிலுநர்கள்  மற்றும் ஏனையோர்.

ஆம்.மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு ஊ.ந.பொ.நி செலுத்துவதற்கு பொறுப்புவாய்ந்தவர்.

பங்களிப்புத் தொகைகளைச் செலுத்துவதற்கு ஊ.ந.பொ.நிதியத்தில் எவ்வாறு பதிவு செய்ய முடியும்?

ஊ.ந.பொ.நிதியத்தில் விசேட பதிவுத் திட்டம் எதுவும் இல்லை. தொழில்வழங்குநர்கள் தமது முதலாவது பங்களிப்புத்தொகை கொடுப்பனவினைச் செலுத்துகையில் தானாகவே அவர்கள் ஊ.ந.பொ.நிதியத்தில் பதிவு செய்யப் படுகின்றனர்.ஆனால், தொழில்வழங்குநர்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது தமது ஊ.சே.நி இலக்கத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.தொழில்வழங்குநர் எவரேனும் ஊ.சே.நி. இலக்கம் அற்றவராயின் கொழும்பு – 05, தொழில் செயலகக் கட்டிடம், 10 ஆவது மாடி, நிதி முகாமையாளருடன் (பங்களிப்புத் தொகை – சேகரிப்பு) (தொலைபேசி.011-2503911) தொடர்புகொண்டு அவர்களது கொடுப்பனவுகளை அனுப்புவதற்கான உரிய இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

ஊழியரின் மாதாந்த உழைப்பிலிருந்து ஊ.ந.பொ.நிதியத்திற்கான பங்களிப்புத்தொகையினை தொழில்வழங்குநர் கழிக்க முடியுமா?

முடியாது

பங்களிப்புத் தொகைகள் எவ்வாறு கணக்கிடப்படுதல் வேண்டும்.

ஊ.சே.நிதியத்தினைப் போலன்று, தொழில்வழங்குநர்கள் ஊழியர்களின் உழைப்பிலிருந்து ஊ.ந.பொ.நி பங்களிப்புத் தொகையினைக் கழித்தல் ஆகாது. தொழில்வழங்குநர், ஊழியரின் மாத மொத்த உழைப்பிலிருந்து 3% ஊ.ந.பொ.நி பங்களிப்புத் தொகையினைக் கணக்கிடுதல் வேண்டும். மொத்த மாத உழைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குதல் வேண்டும்:

 

(அ)
வேதனம்,சம்பளம் அல்லது கட்டணம்
(ஆ)
வாழ்க்கைச் செலவுப் படி,விசேட வாழ்க்கைப் படி மற்றும் ஏனைய ஒத்த படிகள்
(இ)
விடுமுறைகள் தொடர்பான கொடுப்பனவு
(ஈ)
ஊழியருக்கு தொழில்வழங்குநரால் வழங்கப்படுகின்ற சமைத்த அல்லது சமைக்காத உணவின் பெறுமதி (அத்தகைய பெறுமதிகளை முடிவாகத் தீர்மானிப்பது அரசாங்க தொழில் ஆணையாளர் ஆகும்)
(உ)
உணவுப் படி
(ஊ)
குறிப்பிடப்படக்கூடியவாறான பிற வேறு வகையான ஊதியங்கள்
(எ)
கழிவுகள் (தரகு), துண்டு வீதக் கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்த அடிப்படைக் கொடுப்பனவுகள் வடிவத்திலுள்ள கொடுப்பனவுகள்

பங்களிப்புத் தொகைகளை எவ்வாறு செலுத்த முடியும்.? மற்றும் பங்களிப்புத் தொகைகளைச் செலுத்தும்போது என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்?

ஊ.ந.பொ.நி இரண்டு (02) வகை தொழில்வழங்குநர்களைக் கொண்டிருக்கின்றது.
(a)
பெரிய வகை (15 ஊழியர்களிலும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட தொழில்வழங்குநர்கள்
(b)
சிறிய வகை (15 ஊழியர்களுக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட தொழில்வழங்குநர்கள்

பெரிய வகையிலுள்ள தொழில்வழங்குநர்கள் பங்களிப்புத் தொகையினைச் செலுத்து கின்றபோது முறையாக  பூரணப்படுத்தப்பட்ட  “R1” பணம் அனுப்பும் படிவத்தினை காசோலையுடன், காசுக் கட்டளை அல்லது பணக் கொடுப்பனவுடன் சமர்ப்பித்தல் வேண்டும். சிறிய வகையிலுள்ள தொழில் வழங்குநர்கள் பங்களிப்புத்தொகையினைச் செலுத்துகின்றபோது முறையாக  பூரணப்படுத்தப்பட்ட  “R4” பணம் அனுப்பும் படிவத்தினை காசோலையுடன், காசுக் கட்டளை அல்லது பணக்கொடுப்பனவுடன் சமர்ப்பித்தல் வேண்டும். “R1” or “R4” பணம் அனுப்பும் படிவமின்றி ஊ.ந.பொ.நியதியத்திற்கு அனுப்பப்டும் கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

கொடுப்பனவு முறைகள் யாவை?

சாதாரண முறை– காசோலைகள், பணம் அல்லது காசுக் கட்டளையினால் கொடுப்பனவுகளை அனுப்புதல்
இலத்திரனியல் முறை– இணையத்தினூடாக

பங்களிப்புத் தொகையினைச் செலுத்துவதற்கான இறுதித் திகதி யாது?

தொடர்ந்து வருகின்ற மாதத்தின் இறுதி வேலை நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ தொழில்வழங்குநர்கள் தமது மாதாந்த ஊ.ந.பொ.நி பங்களிப்புத் தொகைகளைச் செலுத்துதல் வேண்டும்.

காலதாதமான கொடுப்பனவுகளுக்கு ஏதேனும் தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டுமா?

ஆம்.காலதாமத்திற்கு ஏற்ப பின்வருமாறு 5% இலிருந்து  50% வரை மிகை விதிப்பு செலுத்தப்படுதல் வேண்டும்:
5%
10 நாட்களை விஞ்சாத காலதாமதம்
15%
11 நாட்கள் முதல் 01 மாதத்திற்கிடையிலான காலதாமதம்
20%
01  மாதம் முதல் 03 மாதத்திற்கிடையிலான காலதாமதம்
30%
03 மாதம் முதல் 06 மாதத்திற்கிடையிலான காலதாமதம்
40%
06 மாதம் முதல் 12 மாதத்திற்கிடையிலான காலதாமதம்
50%
12 மாதங்களை விஞ்சிய காலதாமதம்

“R1” இனால் பணம் அனுப்பும் தொழில்வழங்குநர்கள் ஊழியர்களின் விபரங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது?

“R1” (பெரிய வகை)  பங்களிப்புத்தொகைகள் செலுத்துகின்ற ஒவ்வொரு தொழில்வழங்குநரும் பின்வருமாறு காலாண்டு அறிக்கைகளை  சமர்ப்பித்தல் வேண்டும்:
1 ஆவது காலாண்டு
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்
2 ஆவது காலாண்டு
(தொடர்ந்த வருகின்ற ஆண்டின்) பெப்ரவரி 28 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர்

அவ்வாறி, தொழில்வழங்குநரால் செலுத்தப்படுகின்ற திரட்டின் முகப்பெறுமானத்தின் ஒவ்வொரு மாத காலதாமதக் கொடுப்பனவிற்கும் 1% மிகை விதிப்பு செலுத்துதல் வேண்டும்.

ஊ.ந.பொ.நி கொடுப்பனவிற்காக எவ்வாறு காசோலையை எழுதுவது மற்றும் எங்கே அனுப்புவது?

காசோலைகள் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்” என்ற பெயருக்கு எழுதப்படுதல் வேண்டும் என்பதுடன் கொழும்பு – 05, தொழில் செயலகக் கட்டிடம், 10 ஆவது மாடி, நிதி முகாமையாளருக்கு (உதவுதொகை – சேகரிப்பு) அனுப்புதல் வேண்டும்.தொழில் வழங்குநர் தமது ஊ.ந.பெ.நி கொடுப்பனவுகளை தனிப்பட்ட முறையில் மேலுள்ள முகவரியில் கையளிக்கவும் முடியும்.

இணையத்தினூடாக ஊ.ந.பொ.நி பங்களிப்புத்தொகைக் கொடுப்பனவுகளைச் செய்வதனால் தொழில்வழங்குநர்களுக்கு கிட்டுகின்ற நன்மைகள் யாவை?

(a)தொழில்வழங்குநர்கள் தமது கொடுப்பனவுகளை விடுமுறை நாட்களில் அல்லது இரவிலும்கூட செலுத்த முடியும்.
(b)ஆவணத்துடன் சம்பந்தப்பட்ட வேலையல்ல.
(c)பெரிய வகை தொழில்வழங்குநர் (“R1” இனால் ஊ.ந.பொ.நி. செலுத்து கின்ற) மாதாந்தம் தமது ஊழியர்களின் விபரங்களைச் (திரட்டுக்கள்) சமர்ப்பிக்க முடியும். இந்த விபரங்களை இணையத்தினூடாக தமது உரிய வங்கிக் கணக்குகளுக்கு மேலேற்ற ( upload) முடியும். இவர்கள் படிவங்களை நிரப்பி அரையாண்டு அறிக்கைகளை அனுப்புவதைத் தவிர்க்க முடியும்.

 

புதிய ஊழியருக்கான பங்களிப்புத் தொகைகளைச் செய்வதற்கு தொழில்வழங்குநர் ஆரம்பிப்பது எப்போது?

புதிய ஊழியர் உடனடியாக ஊ.ந.பொ.நிதியத்திற்கு சேர்க்கப்படுதல் வேண்டும் என்பதை தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.தொழில்வழங்குநர் 1 ஆவது வேதனத்திலிருந்து பங்களிப்புத் தொகைகளைஅனுப்புதல் வேண்டும்