தமது அங்கத்தவர்களுக்கான புகுபதிகைக் கணக்கினை (Logging Account) ஆரம்பிப்பதற்கு, ஊ.நபொ.நி சபையில் பதிவு செய்துள்ள தொழில்வழங்குநர்கள் உரிய துணை ஆவணங்களுடன் ஊ.நபொ.நி மின்னணு சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி தலைமை அலுவலகத்தில் உள்ள அங்கத்தவர் கணக்குப் பிரிவில் உதவிப் பொது முகமையாளரிடம் (அங்கத்தவர் கணக்கு) சமர்ப்பிப்பதன் மூலம் ஊ.நபொ.நி சபையிடம் கோரலாம். புகுபதிகை (Logging Account) விபரங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சமர்ப்பிக்கும்போதோ வழங்கப்படும். தொழில்வழங்குநர் ஒருவர் தமது நிறுவனத்தின் தேவைக்கிணங்க ஒன்றைவிடக் கூடுதலான புகுபதிகை கணக்குகளைக் (Logging Account) கோரலாம். பெற்றுக்கொண்ட (Logging Account) புகுபதிகைக் கணக்குகளைப் பயன்படுத்தி, தொழில்வழங்குநரால் இலங்கை நாட்டின் www.srilanka.lk எனும் இணையத்தள நுழைவாயிலில் பிரவேசிப்பதன் மூலம் அல்லது ஊ.நபொ.நி இணையத்தளத்தில் உள்ள தொழில்வழங்குநர் புகுபதிகையைப் பயன்படுத்தி சேவையினைப் பெறவும் தமது அங்கத்தவர்களுக்கான புகுபதிகைக் கணக்குகளை ஆரம்பிக்கவும் தனிப்பட்ட அங்கத்தவர் நிலுவைகளைப் பார்வையிடவும் எல்லா அங்கத்தவர்களினதும் நிலுவைகளைக் காட்சிப்படுத்தவும் தொழில்வழங்குநர் சுருக்கக் குறிப்புத் தகவல்களை மாற்றவும் முடியும். |