மின்னணு (e) சேவைகள்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தொழில்வழங்குநர்கள் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோரின் நன்மைக் கருதி பின்வரும் மின்னணு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இணையவழி ஊடாக மற்றும் குறுஞ்செய்தி ஊடாக ஊ.ந.பொ.நி. நிலுவையை அறிதல்

සේවා නියුක්තය‍න්‍‍ගේ භාර අරමුද‍ලේ ‍‍ශේෂය

මාර්ගගතව

කෙටි පණිවිඩ

சுயதொழில் அங்கத்தவர் உட்பட ஊ.நபொ.நி அங்கத்தவர்கள் இலங்கை நாட்டின் www.srilanka.lk எனும் இணையத்தள நுழைவாயிலில் பிரவேசிப்பதன் மூலம்  அல்லது தமது தனிப்பட்ட புகுபதிகை கணக்கினைப் பயன்படுத்தி ஊ.நபொ.நி இணையத்தளத்தில் அங்கத்தவர் நிலுவையினைப் பார்க்க எனும் நுழைவினூடாக தமது ஊ.நபொ.நி நிலுவையினைப் பார்வையிடும் வசதியினைப் பெறுகின்றனர்.
பின்வரும் இரு முறைகளில் அங்கத்தவர் ஒருவர் தனது புகுபதிகை கணக்கினை ஆரம்பிக்கலாம்.

தொழில்வழங்குநரால் அங்கத்தவர் புகுபதிகைக் கணக்கினை (Logging Account) ஆரம்பித்தல்

தமது அங்கத்தவர்களுக்கான புகுபதிகைக் கணக்கினை (Logging Account) ஆரம்பிப்பதற்கு, ஊ.நபொ.நி சபையில் பதிவு செய்துள்ள தொழில்வழங்குநர்கள் உரிய துணை  ஆவணங்களுடன் ஊ.நபொ.நி மின்னணு சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி தலைமை அலுவலகத்தில் உள்ள அங்கத்தவர் கணக்குப் பிரிவில் உதவிப் பொது முகமையாளரிடம் (அங்கத்தவர் கணக்கு) சமர்ப்பிப்பதன் மூலம் ஊ.நபொ.நி சபையிடம் கோரலாம். புகுபதிகை (Logging Account) விபரங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சமர்ப்பிக்கும்போதோ வழங்கப்படும். தொழில்வழங்குநர் ஒருவர் தமது நிறுவனத்தின் தேவைக்கிணங்க ஒன்றைவிடக் கூடுதலான புகுபதிகை கணக்குகளைக் (Logging Account) கோரலாம்.

பெற்றுக்கொண்ட (Logging Account) புகுபதிகைக் கணக்குகளைப் பயன்படுத்தி, தொழில்வழங்குநரால் இலங்கை நாட்டின் www.srilanka.lk எனும் இணையத்தள நுழைவாயிலில் பிரவேசிப்பதன் மூலம் அல்லது ஊ.நபொ.நி இணையத்தளத்தில் உள்ள தொழில்வழங்குநர் புகுபதிகையைப் பயன்படுத்தி சேவையினைப் பெறவும் தமது அங்கத்தவர்களுக்கான புகுபதிகைக் கணக்குகளை ஆரம்பிக்கவும் தனிப்பட்ட அங்கத்தவர் நிலுவைகளைப் பார்வையிடவும் எல்லா அங்கத்தவர்களினதும் நிலுவைகளைக் காட்சிப்படுத்தவும் தொழில்வழங்குநர் சுருக்கக் குறிப்புத் தகவல்களை மாற்றவும் முடியும்.

ஊ.நபொ.நி சபையினால் அங்கத்தவர் புகுபதிகைக் கணக்கினை (Logging Account) ஆரம்பித்தல்

தலைமை அலுவலகத்தில் உள்ள அங்கத்தவர் கணக்குப் பிரிவில் உதவிப் பொது முகாமையாளருக்கு அல்லது அண்மையிலுள்ள பிராந்திய அலுவலகத்திற்கு அங்கத்தவர்களுக்கான ஊ.நபொ.நி மின்னணு சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி சமர்ப்பிப்பதன் மூலம் ஊ.நபொ.நி சபையில் பதிவுசெய்துள்ள அங்கத்தவர்கள் நேரடியாகவே ஊ.நபொ.நி சபையிடம் கோரலாம். புகுபதிகை விபரங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சமர்ப்பிக்கும்போதோ வழங்கப்படும்.

புகுபதிகைக் கணக்கினைப் பயன்படுத்தி, அங்கத்தவருக்கான புகுபதிகைக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இலங்கை நாட்டின் www.srilanka.lk எனும் இணையத்தில் சேவையினைப் பெறவும் ஊ.நபொ.நி இணையத்தளத்தில் உள்ள அங்கத்தவர் நிலுவையினைப் பார்க்க எனும் தனது ஊ.நபொ.நி நிலுவையினைப் பார்வையிடவும் சுருக்கக் குறிப்புத் தகவல்களை மாற்றவும், கடவுச்சொல்லை மீள் இடவும், கோரல் விண்ணப்பப் பத்திரங்களை தரவிறக்கம் செய்யவும் அங்கத்தவரால் முடியும்.

மேலும் அங்கத்தவரால் கணக்கினை ஆரம்பிக்கும் போது பின்வருமாறு 1919 இற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் தனது கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஊடாக ஊ.நபொ.நி நிலுவையினைப் பார்வையிடலாம்.

1919 இற்கு ETF < இடைவெளி> BLC < இடைவெளி > ‘புகுபதிகை பயனர் பெயர்’

சுயதொழில் அங்கத்தவர் புகுபதிகைக் கணக்கினை ஆரம்பித்தல்

தலைமை அலுவலகத்தில் உள்ள சுய தொழில் அங்கத்தவர் கணக்குப் பிரிவில் உதவிப் பொது முகாமையாளருக்கு அல்லது அண்மையிலுள்ள பிராந்திய அலுவலகத்திற்கு சுய தொழில் அங்கத்தவர்களுக்கான ஊ.நபொ.நி மின்னணு சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி சமர்ப்பிப்பதன் மூலம் ஊ.நபொ.நி சபையில் பதிவு செய்துள்ள சுய தொழில் அங்கத்தவர்கள் நேரடியாகவே ஊ.நபொ.நி சபையிடம் கோரலாம். புகுபதிகை விபரங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சமர்ப்பிக்கும் போதோ வழங்கப்படும்.

இலங்கை நாட்டின் www.srilanka.lk எனும் இணையத்தில் சேவையினைப் பெறவும் வழங்கப்பட்ட புகுபதிகைக் கணக்குகளைப் பயன்படுத்தி ஊ.நபொ.நி இணையத்தளத்தில் உள்ள அங்கத்தவர் நிலுவையினைப் பார்க்க எனும் தனது ஊ.நபொ.நி நிலுவையினைப் பார்வையிடவும் சுருக்கக் குறிப்புத் தகவல்களைமாற்றவும், கடவுச்சொல்லைமீள் இடவும், கோரல் விண்ணப்பப்பத்திரங்களை தரவிறக்கம் செய்யவும் சுய தொழில் அங்கத்தவரால் முடியும்.

மேலும் அங்கத்தவரால் கணக்கினைஆரம்பிக்கும் போது பின்வருமாறு 1919 இற்குகுறுந்தகவல் அனுப்புவதன் மூலம் தனது கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஊடாக ஊ.நபொ.நி நிலுவையினைப் பார்வையிடலாம்.

1919 இற்கு ETF < இடைவெளி> BLC < இடைவெளி > ‘புகுபதிகை பயனர் பெயர்’

குறுந்தகவல் ஊடாக ஊ.நபொ.நி கோரல் விண்ணப்பப்பத்திரத்தின் நிலைமையினை அறிவித்தல்

හිමිකම් පෑ‍මේ ඉල්ලුම් පත්‍රවල තත්ත්වය

කෙටි පණිවිඩ

ஊ.நபொ.நி மீளப்பெறவதற்கான  கோரல் விண்ணப்பப்பத்திரத்தை சமர்ப்பிக்கும் போது, உரிய கொடுப்பனவு,  கொடுப்பனவுக்காக தயாராகும் வரை விண்ணப்பம் பல்வேறு படிமுறைகளுக்கு ஊடாகச் செல்லும். இப்படிமுறைகளுக்குள்ளாகும் காலப்பகுதியில் அங்கத்தவர் / விண்ணப்பதாரி அறிவுறுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட கட்டங்களில் உள்ள நிலைமையினை விண்ணப்பப் பத்திரத்தில் தரப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் ஊடாக அங்கத்தவருக்கு/ விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.

தொடரறா (Online) மற்றும் குறுந்தகவல் ஊடாக ஊ.நபொ.நி கோரல் விண்ணப்பப்பத்திரத்தின் நிலைமையினை பார்வையிடல்.

හිමිකම් පෑ‍මේ ඉල්ලුම් පත්‍රවල තත්ත්වය

මාර්ගගතව

කෙටි පණිවිඩ

அங்கத்தவர் / விண்ணப்பதாரி அறிவுறுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட கட்டங்களில் உள்ள நிலைமையினைக் குறிப்பிட்டு அங்கத்தவருக்கு / விண்ணப்பதாரிக்கு குறுந்தகவல்களை ஊ.நபொ.நி சபை அனுப்புவது மட்டுமன்றி, www.srilanka.lk எனும் இணையத்தில் வழங்கப்பட்டுள்ள தொடரறா (Online) சேவைகள் மூலம் அல்லது ஊ.நபொ.நி இணையத் தளத்தில் உள்ள கோரல் நிலைமையினைப் பார்க்க அங்கத்தவர் /விண்ணப்பதாரி தாமே தமது விண்ணப்பத்தின் நிலைமையினைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும், அங்கத்தவர் / விண்ணப்பதாரி பின்வருமாறு 1919 இற்குகுறுந்தகவல் அனுப்புவதன் மூலம் விண்ணப்பப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தனது கையடக்கத் தொலைபேசிக் குறுந்தகவல் ஊடாக தமது விண்ணப்பத்தின் நிலைமையைக் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

1919 இற்கு ETF < இடைவெளி> CHK < இடைவெளி > ‘கோரல் தொடர்பு இல’