இந்த சபையின் முன்னேற்றமானது, கடந்த சில வருட காலப்பகுதியில் சேகரிப்புகள், முதலீட்டு வருமானங்கள், மிகை விதிப்பு வருமானம், நிதியத்தின் வளர்ச்சி ஏனையவை உள்ளடங்கலாக குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அதற்கிணங்க 2019 ஆம் ஆண்டு சகல அங்கத்தவர்களுக்கும் மொத்த பங்கிலாம் மற்றும் வட்டி வீதங்களின் மொத்தத்தை 8% ஆக வெளியிடுவதற்கு சபைக்கு இயலுமாகியது. அனைத்து முக்கிய தொழிற்பாடுகளும் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் நாடளாவியரீதியில் தொழிற்படுகின்ற 19 பிராந்திய அலுவலகங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது. சபையின் மொத்த பதவி ஆளணியினர் சுமார் 1046 பேரில் அதிகமானவர்கள் இளைமையான வளவாளர்களாக உள்ளனர். அது சபையின் செயற்பாடுகளை பயனுறுதிவாய்ந்த முறையில் கையாள்வதற்கு உதவுகின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் மிகவும் பலமுடன் அங்கத்தவர்களுக்கு சேவையாற்றுவதே எமது திடமான எதிர்பார்ப்பாகும். |