அரசாங்கத் திணைக்களங்களில் ஓய்வூதியத்தைக் கொண்டுள்ள பணியார்கள் தவிர்ந்த வர்த்தகத்தின் தன்மை மற்றும் வகைப்பாடு தொடர்பில் ஒரு பணியாளரை மாத்திரம் கொண்டுள்ள தொழில் வழங்குநர் ஒருவரும் பங்களிப்புத் தொகை செலுத்துவதற்கு சட்டத்தினால் கட்டுப்பட்டுள்ளார். அரசாங்க கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் தனியார் துறை அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்தும் கடப்பாடு உடையன.