நியதிச்சட்டமல்லாத நன்மைகள்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினது முனைப்பான அங்கத்தவர்களுக்கு (தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள) பெற்றுக்கொள்வதற்கு உரிமையுள்ள அங்கத்தவர் நலனோம்பல் நலத்திட்டங்கள் பல சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பொதுவான நியமங்கள்

சபையின் அனைத்து முனைப்பான அங்கத்தவர்களும் இந்த நலத்திட்டங்களின் பயன்களை அடைந்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றனர். “முனைப்பான அங்கத்தவர்” என்பதன் மூலம் கருதப்படுவது யாதெனில் தற்பேது சேவையிலுள்ள மற்றும் சபைக்கு அவர் சார்பில் பங்களிப்புத் தொகை செலுத்தப்படும் ஆளொருவராகும்.

பின்வரும் நலத்திட்டங்கள் தற்போது நடைமுறையிலுள்ளன

நலத்திட்டம்

ஆரம்பிக்கப்பட்ட திகதி

 • ஐந்தாம் ஆண்டு புலமைப்
  பரிசில் நிதியுதவித் திட்டம்
 • க.பொ.த (உயர் தரப்) பரீட்சையில்
  சித்தியடைந்த ஊ.ந.பொ.நி.
  அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு
  கல்விக்கான உதவி
 • முழுமையாக அங்கவீனமுற்றதன்
  காரணமாக சேவை முடிவுறுத்தப்பட்ட
  ஊ.ந.பொ.நி. அங்கத்தவர்களது
  பிள்ளைகளுக்கு ஐந்தாம் ஆண்டு
  புலமைப் பரிசில் திட்டம்
 • இலவச ஆயுள்
  காப்புறுதித் திட்டம்
 • முழுமையான அங்கவீன
  காப்புறுதித் திட்டம்
 • இருதய சத்திர சிகிச்சைக்கான
  நிதி உதவித் திட்டம்
 • உள்பக்க கண்வில்லை
  பொருத்தல் செலவுகள் மீளளிப்பு
 • சிறுநீரக மாற்று சத்திர
  சிகிச்சைக்கான நிதி உதவித் திட்டம்
 • “சிரமசுவ ரெகவரண” வைத்தியசாலை
  அனுமதி மருத்துவ உதவித் திட்டம்
 • “வியன” வீட்டுக் கடன் திட்டம்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் நிதியுதவித் திட்டம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமைச் சித்தி பெறும் நிதியத்தின் முனைப்பான அங்கத்தவர்களின் (பெற்றோரில் எவராவது) பிள்ளைகள் இந்த சன்மானத்தை பெற்றுக்கொள்ள தகுதிபெறுகின்றனர். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் ஊ.ந.பொ.நிதிய அங்கத்தவர்களது பிள்ளைகள் 9000 பேருக்கு ரூபா 15000/- வீதம் பணத் தொகையொன்று வருடந்தோறும் வழங்கப்படுகின்றது

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்பு ஏற்புடைய விண்ணப்பங்களை கோருவதற்கான பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படும்.
 2. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் எந்தவித விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

க.பொ.த (உயர் தரப்) பரீட்சையில் சித்தியடைந்த ஊ.ந.பொ.நி. அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி

க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்த நிதியத்தில் முனைப்பான அங்கத்துவத்கை கொண்டுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளிலிருந்து 5000 பேருக்கு ரூபா.12,000/- வீதம் பெறுமதியான கல்விக் கொடையொன்று வருடாந்தம் வழங்கப்படுகின்றது. இக்கொடை அவர்களது மேல் படிப்புக்காக வழங்கப்படுகின்றது. இத்திட்டம் 2010 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. ஒவ்வொரு துறையிலிருந்தும் மாவட்ட அடிப்படையில் ஏற்புடைய பரீட்சையில் பெற்றுக்கொண்ட உயரிய புள்ளிகள் அடிப்படையில் இதற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. பரீட்சை திணைக்களத்தினால் க.பொ.த. (உயர் தரம்) பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்பட்டு பொருத்தமான விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவர்..

முழுமையாக அங்கவீனமுற்றதன் காரணமாக சேவை முடிவுறுத்தப்பட்ட ஊ.ந.பொ.நி. அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் திட்டம்

தற்போது வழங்கப்படும் 9000 புலமைப் பரிசில்களுக்கு மேலதிகமாக முழுமையாக அங்கவீனமுற்றதன் காரணமாக சேவை முடிவுறுத்தப்பட்ட ஊ.ந.பொ.நி. அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் திட்டம் வழங்கப்படுகின்றது. ஏற்புடைய அங்கத்தவர் முழுமையாக அங்கவீனமுற்ற வருடத்திலிருந்து ஐந்து வருட காலப்பகுதிக்குள் அவரின் பிள்ளைகள் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே இப்புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் கருத்திற்கொள்ளப்படுவர்.

இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம்

சகல முனைப்பான அங்கத்தவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் காப்புறுதி வழங்கப்படுகின்றது. அங்கத்தவர் ஒருவரின் மரணத்தின் போது மரணமெய்திய அங்கத்தவரின் சட்டரீதியான வாரிசுகள் அந்த அங்கத்தவரின் தனிப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பங்களிப்புத் தொகைகள், அதற்குரிய வட்டி மற்றும் பங்கிலாபங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெறுகின்றனர். அதற்கு மேலதிகமாக ஏற்புடைய காப்புறுதி நன்மைகளை மரணமெய்திய அங்கத்தவரின் சட்டரீதியான வாரிசுகளுக்கு மாதிரிப் படிவம் VIA, VIII (புதிய) மற்றும் CLA/04 எனும் ஆவணங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும். ஏற்புடைய காப்புறுதி நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தனியான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கத் தேவையில்லை

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. காப்புறுதி நன்மையின் அதி கூடிய வரையறை ரூ 100,000/- ஆகும். ஏற்புடைய மரணம் நிகழ்ந்த மாதத்திற்கு முன்னர் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் அங்கத்தவர் பெற்றுவந்த சம்பளத்தினது சராசரியின் பதினைந்து மடங்கு பெறுமதியான தொகையாகும்.
 2. மரணத்திற்கான நலன்களைப் பெறுவதற்கு முன்வைக்கப்படும் விண்ணப்பம் ஏற்புடை அங்கத்தவரின் மரணம் நிகழ்ந்த தினத்திலிருந்து ஒரு வருடத்திற்கு மேற்படாத காலப்பிரிவுக்குள் சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
 3. பயனாளிகள் மரணமெய்திய அங்கத்தவரின் சட்டரீதியான வாரிசுகளாக இருத்தல் வேண்டும்.
 4. ஏற்புடைய மரணத்திற்கு முன்னரான பன்னிரெண்டு மாத காலப்பகுதியில் தொடர்ந்தேர்ச்சியாக பங்களிப்புத் தொகையை செலுத்தியிருத்தல் வேண்டும்.
 5. மரணசாசன வழக்கொன்று உள்ள போது நிதியத்தின் மீதி மற்றும் காப்புறுதி நலன்கள் ஏற்புடைய வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.
 6. தீராத நோயொன்றின் காரணமாக மரணமெய்தும் போது அங்கத்தவரின் முனைப்பான அங்கத்துவம் மற்றும் பன்னிரெண்டு மாத கால ஆகக் குறைந்த காலப்பகுதி என்பன ஏற்புடையதாகாது. பின்வரும் நோய்களுக்கான நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது இரண்டு மாத பங்களிப்புத் தொகையை செலுத்தியிருப்பது போதுமானது.

மரணத்திற்கான காரணம்

 1. புற்றுநோய்
 2. காசநோய்
 3. நீடித்த சிறுநீரகநோய்
 4. நீடித்த ஈரல் செயலிழப்பு
 5. செப்டிசீமியா

தேவையான ஆவணங்கள்

 1. VIII படிவம் பகுதி I மற்றும் II உரிமைக் கோருபவராலும் பகுதி III தொழில் வழங்குநராலும் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

 2. CLA/04 படிவம் (புதிய)

  கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரியின் மற்றும் மரணமெய்தியவரின் தகவல்கள்.

  ☛ VIII (A) படிவம் – ஏனைய விண்ணப்பதாரிகளினால் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.
  ☛ VIII (B) படிவம் – அங்கத்தவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பங்களிப்புத் தொகைகள் பற்றிய விபரங்களை தொழில் வழங்குநர்களினால் இந்தப் படிவத்தில் வழங்குதல் வேண்டும். ஒரு அங்கத்தவர் ஒரு தொழில் வழங்குநர்களுக்கு மேற்பட்டவர்களிடம் பணியாற்றியிருப்பின் ஒவ்வொரு தொழில் வழங்குநர்களுக்கும் தனியான படிவங்கள் [VI (B) படிவம் அவசியமாகும்.] 
  ☛ VIII (C) படிவம் – உள்ளூராட்சி சேவையில் ஓய்வூதிய முறைக்கு உள்வாங்கப்பட்ட ஊழியர்கள் பொருட்டு தொழில் வழங்குநர்களினால் பூரணப்படுத்தல் வேண்டும்.
  ☛ VIII (D) படிவம் – அண்மைய கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரினால் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

முழுமையான அங்கவீன காப்புறுதித் திட்டம்

முழுமையாக அங்கவீனமுற்றதன் காரணமாக தொழிலை இழக்கும் சந்தர்ப்பத்தில் அந்த அங்கவீனத்தின் அளவுக்கு ஏற்ற வகையில் ரூபா 300,000/- அதிகூடிய வரையறைக்கு உட்பட்டு (2009 டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம்) இந்தக் காப்புறுதி திட்டத்தினூடாக முனைப்பான அங்கத்தவர்களுக்கு நலன்கள் கிடைக்கும். அவசர விபத்துக்கள் 30 இல் சில கைத்தொழில் சார்ந்த நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் நிரிழிவு போன்ற நோய்களுக்கு 24 மணிநேரமும் அங்கத்தவர்களுக்கு காப்புறுதி கிடைக்கின்றது.

பின்வரும் உபாதைகள் உள்ளடங்கும்

 1. இரண்டு கண்களும் முற்றாக பார்வையை இழத்தல்
 2. இரண்டு கைகள் அல்லது கால்கள் முழுமையாக இழக்கப்படல்
 3. ஒரு கண் பார்வை இழத்தல் அத்தோடு ஒரு கை அல்லது கால் முற்றாக இழக்கப்படல்
 4. ஒரு கண் பார்வை இழத்தல் அத்தோடு ஒரு கை அல்லது கால் முற்றாக இழக்கப்படல்
 5. ஒரு கை அல்லது கால் முற்றாக இழக்கப்படல் குறிப்பு – ஏற்புடைய முழுமையான அங்கவீனக் குறைபாட்டை உறுதிப்படுத்த மாதிரிப் படிவம் VII மூலம் மருத்துவ சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்
 6. அங்கவீனமுற்ற அங்கத்தவர் ஏற்புடைய நன்மைகளுக்கு தகுதி பெறுவது மருத்துவ அதிகாரி ஒருவரினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் எற்புடைய அங்கவீனம் 50% ஐ விஞ்சியிருந்தால் மாத்திரமேயாகும்.
 7. திடீர் விபத்து / நோய் காரணமாக தொழில் முடிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்புடைய தொழில் வழங்குனரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
 8. வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட திகதி அல்லது தொழில் முடிவுறுத்தப்பட்ட திகதி எனும் இரு தினங்களிலும் பின்னர் அமைந்த திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஏற்புடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
 9. ஏற்புடைய மரணம் நிகழ்ந்த மாதத்திற்கு முன்னர் கடந்த பன்னிரெண்டு மாத காலப்பிரிவுக்குள் அங்கத்தவர் பெற்றுக்கொண்ட சம்பளத்தினது சராசரியின் இருபத்துநான்கு மடங்கு தொகை நலன் கொடுப்பனவாக வழங்கப்படும்.

இருதய சத்திர சிகிச்சைக்கான நிதி உதவித் திட்டம்

சபையினால் வகைப்படுத்தப்பட்டுள்ள சில இருதய சத்திர சிகிச்சைகளுக்கு (கீழே பார்க்க) உள்ளாகும் அங்கத்தவர்கள் ரூபா 350,000/- வரைக்கும் நிதி உதவியை கோருவதற்கு தகுதி பெருகின்றனர். ஏற்புடைய சத்திர சிகிச்சையை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மேற்கொள்ள முடியும்.

பின்வரும் சத்திரசிகிச்சைகள் உள்ளடங்கும்

 1. இருதயச் சுவர் சார்ந்த நோய்கள் (பைபாஸ் சத்திர சிகிச்சை)

 2. பிறவி இருதய நோய் (இருதய வால்வு நோய்கள்)

 3. இருதய வால்வுகள் மாற்றுதல்

 4. இதயமுடுக்கி (பீஸ்மேகர்) இயந்திர ரீதியில் இதயம் பொருத்தல்

 5. குருதிக் குழாய் சீரமைப்பு மற்றும் ஸ்டென்டின் சத்திர சிகிச்சை

 6. கதிரியக்க அதிர்வு நீக்கம் (குருதிக் குழாய் சீரமைப்பு சிகிச்சைக்கு ஒப்பான சிகிச்சை முறை)

 7. இரத்தநாடி உதறல் நீக்கி மூலம் பொருத்தல் (ICD) (இதயமுடுக்கி (பீஸ்மேகர்) இயந்திர ரீதியில் இதயம் பொருத்தல் முறைக்கு ஒப்பானது)

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. இத்தகைய சத்திர சிகிச்சைகளை உள்நாட்டில் அரச மருத்துவ மனைகளிலோ அல்லது தனியார் மருத்துவ மனைகளிலோ அல்லது வெளிநாட்டிலோ செய்ய முடியும்.
 2. சத்திர சிகிச்சைக்கு உட்படும் அங்கத்தவர் இருதயநோய் விசேட வைத்திய நிபுணரினால் வழங்கப்படும் ஏற்புடைய சத்திர சிகிச்சை வகை குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றையும் மருத்துவ மனையினால் வழங்கப்படும் அதற்குரிய மதிப்பீட்டு செலவினம் தொடர்பான தகவல்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
 3. பெற்றுக்கொண்ட நிதி உதவி தொடர்பான சகல மூலாதாரங்கள் மற்றும் அதற்கு ஏற்புடைய பணத் தொகைகளையும் அங்கத்தவரால் வெளிப்படுத்துதல் வேண்டும். (உதாரணமாக – தொழில் வழங்குனர், ஜனாதிபதி நிதியம், காப்புறுதி கம்பனிகள் மற்றும் வேறு அமைப்புக்கள் / அறக்கட்டளைகள்
 4. திடீர் விபத்து / நோய் காரணமாக அங்கத்தவரின் தொழில் முடிவுறுத்தப்பட்டிருப்பதாக ஏற்புடைய தொழில் வழங்குனரால் அத்தாட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
    ♥ எற்புடைய சத்திர சிகிச்சையை வெளிநாடொன்றில் மேற்கொண்டுள்ள போது, இலங்கையிலுள்ள இருதயநோய் விசேட வைத்திய நிபுணரினால் நோயாளி வெளிநாட்டு மருத்துவமனையொன்றுக்கு முன்னிலைப்படுத்தி வழங்கிய கடிதத்தையும் சத்திர சிகிச்சைக்குரிய மொத்த செலவு குறிப்பிடப்பட்ட ஏற்புடைய வெளிநாட்டு மருத்துவமனையினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களையும் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
      ♥ அங்கத்தவரால் தனது சத்திர சிகச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு சபையினால் வழங்கப்படும் பிணைமுறிக் கடிதமொன்று சமர்ப்பிக்கப்படும். அத்தோடு ஏற்புடைய சத்திர சிகச்சை முடிவுற்ற பின்னர் அம்மருத்துவமனைக்கு அப்பிணைமுறியில் உள்ள தொகையை செலுத்துவதற்கு சபை பொறுப்பேற்பதாக உறுதிப்பாடொன்று வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

 1. சத்திர சிகிச்சையொன்று அவசியமென இருதய நோய் விசேட வைத்திய நிபுணரினால் வழங்கப்பட்ட கடிதமும் நோயின் விபரமும்.
 2. சத்திர சிகிச்சையின் மதிப்பீடுச் செலவினங்கள் குறிப்பிடப்பட்டு ஏற்புடைய மருத்துவமனையினால் வழங்கப்பட்ட கடிதம்.
 3. அங்கத்தவரின் (நோயாளியின்) குருதிக் குழாய் அமைப்புப்பட (என்ஜியொகிராம்) பரிசோதனை அறிக்கையின் பிரதி.
 4. ஜனாதிபதி நிதியம், காப்புறுதி கம்பனி, தொழில் வழங்குனர் மற்றும் வேறு நிறுவனங்களிலிருந்து வழங்கப்படும் நிதியுதவிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
 5. மருத்துவமனையால் வழங்கப்படும் இறுதி பற்றுச்சீட்டின் மற்றும் சிட்டையின் மூலப்பிரதிகள்.
 6. தொழில் வழங்குனரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அங்கத்தவரின் தேசிய ஆள் அடையாள அட்டை, நோய் அறியும் அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகம் (கணக்கு உடமையாளரின், வங்கியின் மற்றும் அதன் கிளையின் விபரம் உள்ளடங்கிய பக்கம் தென்படும் விதத்தில்) ஆகிய ஆவணங்களின் பிரதிகள்
 7. ஏற்புடைய சத்திர சிகிச்சையை வெளிநாடொன்றில் மேறகொள்வதாயின் இலங்கையிலுள்ள இருதய நோய் விசேட வைத்திய நிபுணரினால் நோயாளியை வெளிநாட்டு மருத்துவமனையொன்றுக்கு முன்னிலைப்படுத்தி வழங்கிய கடிதம்

உள்பக்க கண்வில்லை பொருத்தல் செலவுகள் மீளளிப்பு

 • கண்வில்லை மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் கண்வில்லையை பொருத்துவதற்கு செலவிடப்பட்ட செலவுகள், ஒரு கண்ணுக்கு ரூபா 25,000/- எனும் அதிகூடிய எல்லைக்கு அமைய அச்செலவினத்தை பெற்றுக்கொள்ள உரிமை கோருவதற்கு இத்திட்டத்தின் மூலம் அங்கத்தவர்களுக்கு சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது. (2016  ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறையிலுள்ளது)

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. இந்த சத்திர சிகிச்சையை உள்நாட்டில் அரசாங்க அல்லது தனியார் மருத்துவ மனைகளில் செய்ய முடியும். கண் வில்லைக்கான செலவுகள் ஒரு கண்ணுக்கு 25,000/- எனும் அதிகூடிய எல்லைக்கு உட்பட்ட வகையில் மீளளிப்புச் செய்யப்படும்.
 2. நேயாளி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் ஏற்புடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
 3. கண் வில்லை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டின் முதல் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும். தொழில் வழங்குனரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஏற்புடைய மருத்துவமனையினால் வழங்கப்பட்ட நோயாளர் அட்டையின் பிரதியொன்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவித் திட்டம்

2006 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நலத்திட்டம் சிறுநீரகத்தைப் பொருத்துவதற்காக ரூபா. 350,000/- வரையிலான அதி கூடிய நிதியுதவியை வழங்குகின்றது.

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு மாத்திரம் நிதியுதவி வழங்கப்படும். சிறுநீரக உபாதைகள் தொடர்பான பிற சத்திர சிகிச்சைகள் இத்திட்டத்தினுள் அடங்காது.
 2. சிறுநீரகத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர் (நோயாளி) மாத்திரம் இந்த நலத்திட்டத்திற்கு உரிமையுள்ளவர் ஆவார். சிறுநீரகத்தை வழங்கும் நபர் ஊ.ந.பொ.நிதியத்தில் முனைப்பான அங்கத்தவராக இருந்த போதிலும் இத்திட்டத்தின் கீழ் எவ்வித நன்மைகளுக்கும் தகுதிபெறமாட்டார்.
 3. இலங்கையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் ஏதேனும் மருத்துவமனையொன்றில் அல்லது வெளிநாட்டு மருத்துவமனையொன்றில் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
 4. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளாகும் அங்கத்தவர் ஒருவர் ஏற்புடைய சத்திர சிகிச்சை வகை மற்றும் அதன் செலவுகள் பற்றிய விபரங்கள் அடங்கிய கடிமொன்றை ஏற்புடைய மருத்துவமனையிலிருந்து பெற்று சமர்ப்பித்தல் வேண்டும்.
 5. சபையினால் விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி ஏற்புடைய சத்திர சிகிச்சைக்கு முன்னரோ அல்லது சத்திர சிகிச்சையின் பின்னர் 90 நாட்களுக்குள்ளோ சபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
 6. ஏற்புடைய சத்திர சிகிச்சையை வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளும் போது இலங்கையிலுள்ள விசேட அறுவை சிகிச்சை மருத்துவரால் / உடற்கூற்று மருத்துவரால் நோயாளி வெளிநாட்டு மருத்துவமனைக்கு முன்னிலைப்படுத்தி வழங்கிய கடிதத்தையும் சத்திர சிகிச்சைக்கு செலவாகிய முழுத் தொகையையும் குறிப்பிட்டு ஏற்புடைய வெளிநாட்டு மருத்துவமனையினால் வழங்கப்பட்ட சகல பற்றுச்சீட்டுக்களையும் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

  ★இந்த திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செலவுகளை பெற்றுக்கொள்வதற்கு ரூபா. 300,000/- நிதியுதவி வழங்கப்படும். சிறுநீரகத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர் (நோயாளி) மாத்திரம் இந்த நலத்திட்டத்திற்கு உரிமையுள்ளவர் ஆவார். சிறுநீரகத்தை வழங்கும் நபர் ஊ.ந.பொ.நிதியத்தில் முனைப்பான அங்கத்தவராக இருந்த போதிலும் இத்திட்டத்தின் கீழ் எவ்வித நன்மைகளுக்கும் தகுதிபெறமாட்டார்.

“சிரமசுவ ரெகவரண” வைத்தியசாலை அனுமதி மருத்துவ உதவித் திட்டம்

இது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதற்கான செலவுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அங்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு நலனோம்பல் திட்டமாகும். இந்த திட்டத்திற்குரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு ரூபா 50000/- வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான செலவுகளை கோருவதற்கு அங்கத்தவர்கள் உரிமைப் பெறுகின்றனர்.

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. இதற்கு தகமைப் பெறுவதற்கு ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டு காலம் முழுவதும் அங்கத்தவர்கள் பங்களிப்புத் தொகையை செலுத்தியிருத்தல் வேண்டும். மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு அங்கத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இந்த ஐந்து வருட காலத்தை பூர்திசெய்திருப்பது அவசியமாகும். வருடத்திற்கு ஆகக் கூடிய கொடுப்பனவு ரூபா 25000/- ஆகும். ஒரு ஊழியருக்கு தனது தொழில்புரியும் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய எல்லை ரூபா 50000/- ஆகும்.
 2. அங்கத்தவர் ஒருவர் குறைந்தபட்சம் 48 மணித்தியாலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
 3. சகல அரசாங்க மருத்துவமனைகள், அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் சபையில் பதிவுசெய்துகொண்டுள்ள அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 4. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் ஏற்புடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
 5. அரசாங்க மருத்துவமனையொன்றில் உள்ளக நோயாளியாக இருந்து பெற்றுக்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக நாளந்தம் வழங்கப்படும் ரூபா 1000/- கொடுப்பனவு 10 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்.

விசேட நிபந்தனைகள் ▷ பின்வரும் நோய்கள் / சுகவீனங்களுக்கான செலவுகள் மீளளிக்கப்படும்

 1. தற்கொலைக்கு முயற்சி செய்து அதன் காரணமாக ஏற்பட்ட நோய்களுக்காக சிகிச்சைப் பெறல்.
 2. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக ஏற்பட்ட நேய்களுக்காக சிகிச்சைப் பெறல்.
 3. பாலியல் தொடர்புகள் காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்.
 4. மனோ வியாதிகள்

தேவையான ஆவணங்கள்

 1. மருத்துவமனையினால் வழங்கப்பட்ட சகல பற்றுச்சீட்டுக்களினதும் சிட்டைகளினதும் மூலப் பிரதிகள்.
 2. தொழில் வழங்குனரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அரசாங்க அல்லது தனியார் மருத்துவமனைகளினால் வழங்கப்பட்டநோயாளர் அட்டையின் பிரதியொன்று.
 3. தேசிய ஆள் அடையாள அட்டையின் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் (கணக்கு வைத்திருப்பவர், வங்கி மற்றும் அதன் கிளை போன்ற விபரங்கள் காட்டப்பட்டவாறு) தொழில் வழங்குனரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி.
 4. தொழில் வழங்குனர், காப்புறுதி நிறுவனங்கள் அல்லது வேறு நிருவனங்களிலிருந்து மருத்துவமனையில் அனுமதிபெற்றதற்கான மீளளிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அங்கத்தவர் உரிமைப் பெற்றிருப்பின் அவ்வாறு மீள்ளிப்புச்செய்யப்பட்ட தொகை பற்றிய கடிதமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

“வியன” வீட்டுக் கடன் திட்டம்

இந்த கடன் திட்டத்தின் கீழ் சலுகை வட்டி வீதத்தில் ஊழியர்களுக்கு NDB வங்கியிலிருந்து வீட்டுக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடன் திட்டம் தொடர்பாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையும் NDB வங்கியும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்துள்ளன.

சட்டம் மற்றும் நிபந்தனைகள்

 1. இந்த நலனைப் பெறுவதற்கு அடிப்படைத் தேவைப்பாடு யாதெனில் நிதியத்தின் அங்கத்துவத்தை தொடர்ந்தேர்ச்சியாக 5 வருடங்கள் பேணிவருவதாகும்.
 2. கடன் தொகையின் ஆகக் குறைந்த அளவு ரூபா 100,000/- ஆகும். ஆகக் கூடிய எல்லை ரூபா 2,500,000/- ஆகும்.
 3. NDB வங்கி கொழும்பு 02, நவம் வீதி இல 40 எனும் முகவரியில் அமைந்துள்ளது. வீடுகளை கொள்வனவு செய்வதற்கும் வீடுகளை கட்டுவதற்கும் தற்போதுள்ள வீடுகளை விஸ்தரித்துக்கொள்வதற்கும் வீடுகளின் பழுதுபார்ப்புக்களுக்கும் அத்தோடு ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெற்ற வீட்டுக் கடனை ஈடு செய்வதற்கும் ஊ.ந.பொ.நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
 4. இந்த கடன் திட்டத்துக்கு ஏற்புடைய நிபந்தனைகளை திருத்தம் செய்யும் உரிமை NDB வங்கிக்கும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கும் உண்டு.

கடன் பெற்றுக்கொள்ள முடியுமான விடயங்கள்

 1. வீடொன்றை கொள்வனவு செய்வதற்கு
 2. வீடொன்றை திருத்துவதற்கு வீட்டை
 3. விஸ்தீரணப்படுத்துவதற்கு
 4. வீட்டுடன் கூடிய காணியை கொள்வனவு செய்வதற்கு

ஏற்புடைய வட்டி வீதங்கள்

 1. ரூபா. வரை 100,000.00 முதல் ரூபா . வரை 250,000.00 - 10.00%
 2. ரூபா. வரை 250,001.00 முதல் ரூபா . வரை 750,000.00 - 11.00%
 3. ரூபா. வரை 750,001.00 முதல் ரூபா . வரை 2,500,000.00 - 12.00%
(மேலுள்ள வட்டி வீதங்கள் மாறுபட இடமுண்டு.)

கடன் எல்லைகள்

அங்கத்தவர் கணக்கின் மீதிபெற்றுக்கொள்ள முடியுமான கடன் தொகை
ரூபா 25,000.00 – 49,999.00ரூபா 250,000.00
ரூபா 50,000.00 – 74,999.00ரூபா 250,001.00 – 750,000.00
ரூபா. 75,000.00 அல்லது அதற்கு மேல்ரூபா 750,001.00 – 2,500,000.00

விசேட நிபந்தனைகள்

 1. கடன் தொகையை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்புடைய அங்கத்தவர் பங்களிப்புத் தொகையை செலுத்துபவராக இருத்தல் வேண்டும். முனைப்பான அங்கத்தவராக ஐந்து வருட காலத்தை பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்.
 2. கடன் தொகையை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரைக்கும் அங்கத்தவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பங்களிப்புத் தொகைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது
 3. கடன் விண்ணப்பங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் பணிகள் NDB வங்கியின் பிரதான அலுவலகத்தினாலோ அல்லது கிளைகள் ஊடாகவோ மேற்கொள்ளப்படும்.