பணிக்கமர்த்தப்பட்டுள்ள அங்கத்தவர்கள்

ஊ.ந.பொ.நிதியத்திற்கு பங்களிப்புத் தொகைகளை அனுப்புதல்

15 பணியாளர்களை விட குறைவாகக் இருந்தால் தொழில்தருநர் உதவுதொகைகளை ஊ.ந.பொ.நி. ‘ஆர்’ 4 படிவத்தில் நிரப்புதல் வேண்டுமென்பதுடன் அங்கத்தவர்களின் விபரங்கள் அதே படிவத்தில் நிரப்பப்படுதலும் வேண்டும்.

15 பணியாளர்களை விட அதிகமான பணியாளர்களைக் கொண்டிருந்தால் தொழில்தருநர் உதவுதொகைகளை ஊ.ந.பொ.நி. ‘ஆர்’ 1 படிவத்தில் நிரப்பப்புதல் வேண்டுமென்பதுடன் அங்கத்தவர்களின் விபரங்கள் படிவம் II திரட்டு என்றழைக்கப்படிகின்ற வேறான திரட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அனுப்புதல் வேண்டும். அங்கத்தவரின் விபரங்களை கோப்பிடப்படும்போது தே.அ.அட்டைக்கு அமைவாக சரியான பெயர், தே.அ.அ. இலக்கம் மற்றும் சரியான அங்கத்துவ இலக்கமும் உதவுதொகையும் கோப்பிடப்படுதல் வேண்டும்.

குறிப்பு :

ஒரே அங்கத்துவ இலக்கத்தை இரண்டு ஊழியர்களுக்கு வழங்க முடியாது என்பதை தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.

அங்கத்தவர்களின் பதிவு

ஊழியரொருவர் அவரது தொழிலின் முதல் நாளிலிருந்து ஊ.ந.பொ.நிதியத்தில் அங்கத்துவத்தை பெறுவதற்கு உரித்துடையவர். ஊழியர் சார்பில் ஊ.ந.பொ.நி அனுப்ப வேண்டியது தொழில்வழங்குநரனது பொறுப்பாகும். அத்தோடு அவ்வாறு செய்யத் தொழில்வழங்குநரைத் தூண்டுவது ஊழியரினதும் பொறுப்பாகும்.

அங்கத்துவத்திற்கு தகுதியானவர்கள் யார் ?

தொழிலின் தன்மையென்பது  ஏற்புடையதன்று. அனைத்து ஊழியர்களும் அவர்கள் நிரந்தர, தற்காலிக, பயிலுநர், அமைய மற்றும் மாற்றல்முறை  வேலையாளர் களாயினும் அவர்கள் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள். துண்டு வீதம், ஒப்பந்த அடிப்படை, வேலையின் செயற்பாட்டின்   அடிப்படை   அல்லது  பிற வேறு  முறையில் எவ்வாறிரிப்பினும் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள்.

அங்கத்துவத்திற்காக நிரப்பப்படவேண்டிய படிவங்கள்

ஊ.சே.நிதியத்தைப் போன்று அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள படிவங்களை நிரப்பவேண்டிய  தேவை இல்லை. ஒரு தடவை ஊ.சே.நிதியத்தில் பதிவுசெய்துள்ள ஊழியர் ஒருவர் அந்த ஊ.சே.நி. இலக்கத்திற்கு பங்களிப்புத் தொகைகளை அனுப்ப முடியும். தமது தனிப்பட்ட சேமலாப நிதியத்தைக் கொண்டிருக்கின்ற தொழில்வழங்குநர்கள் தனிப்பட்ட சேமலாப நிதியத்தின் இலக்கங்களின் கீழ் பங்களிப்புத் தொகைகளை அனுப்ப முடியும்.

கணக்கினை ஒன்றிணைத்தல்

ஊ.சே.நிதியத்தைப் போன்று வெவ்வேறு தொழில்வழங்குநர்களின் கீளுள்ள கணக்குகள் ஒன்றிணைக்கப்படமாட்டாது

அங்கத்தவர்களின்  பெயர்களைத் திருத்துதல்

திருத்தங்களின் தன்மைகளைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
  1. அனுப்பும் படிவம் ‘ஆர் I மூலம் பங்களிப்புத்தொகைகள் செலுத்தபடுகின்ற போது மற்றும் விபரங்கள் படிவம் II திரட்டுக்களில் முகாமையாளர் – அங்கத்தவர் கணக்குகளுக்கு (பெரிய வகைப்பாடு) அனுப்பப்படுதல் வேண்டும்.
  2. பணம் அனுப்பும் படிவங்கள் 4 இனால் பங்களிப்புத் தொகைகள் அனுப்பும் போது நிதி முகாமையாளர் – அங்கத்தவர் கணக்குகளுக்குச் (சிறிய வகைப்பாடு) செலுத்தப்படுதல் வேண்டும்
அங்கத்தவரின் தே.அ.அ இலக்கத்தைத் திருத்துதல்

பெயர், பழைய தே.அ.அ இலக்கம், புதிய தே.அ.அ இலக்கம் மற்றும் மாற்றத்திற்கான காரணம் என்பவற்றை உறுதிப்படுத்தி தொழில்வழங்குநரிடமிருந்து கடிதமொன்று அனுப்பப்படுதல் வேண்டும்.இதற்கு மேலதிகமாக, தேவையானவிடத்து கிராம சேவகரிடமிருந்து எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் அல்லது ஆட்பதிவு ஆணையாளரின் உறுதிப்படுத்தல் அவசியமானதாகும்.தே.அ.அ. இலக்கத்தை மாற்றுதல் சிக்கலான விடயம் என்றபடியால் சரியான ஆவணங்கள் வேண்டுகோளுடன் அனுப்பப்படுதல் வேண்டும்.

தே.அ.அ இலக்கத்தை ஏன் திருத்த வேண்டும்?

ஊ.ந.பொ.நி. உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அங்கத்தவரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தே.அ.அ. இலக்கம் என்பன ஒத்ததாக இருத்தல் வேண்டும்