1980 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க ஊழிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம்
(1980, ஒக்டோபர் 29 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது)
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊ.ந.பொ. நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இந்த நிதியமானது, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையினால் நிருவகிக்கப்படுவதுடன், தற்போது ஊ.ந.பொ.நி சபை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் கௌரவ அமைச்சர் ரவீந்திர சமரவீ அவர்களின் கீழ் செயற்படுகின்றது. சட்டத்தின் ஏற்பாடுகள், கௌரவ அமைச்சரின் கட்டளைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கும் அமைய, பொறுப்புவாய்ந்த எந்தவொரு வகுப்பு அல்லது வகைக்குரித்தான பொறுப்புவாய்ந்த ஒவ்வொரு அரச மற்றும் தனியார் துறைக்கும் பிரயோகிக்கப்படும். சுயவேலைவாய்ப்பிலீடுபட்டுள்ளவர்கள் மற்றும் குடிபெயர் வேலையாளர்கள் தமது சொந்த விருப்பின் பேரில் நிதியத்திற்கு பங்களிப்புத்தொகை செலுத்தவும், அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். நிதியத்தின் தற்போதைய செயற்பாடுடைய அங்கத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் என்பதுடன், 79,000 தொழில்வழங்குநர்களையும் உள்ளடக்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு நிதியத்திடமுள்ள பெறுமதி 339 பில்லியன்ரூபாவாகும். ஊ,ந,பொ.நி. சபையின் செயற்பாடுகளை பரவலாக்கம் செய்வதற்கும், தமது அங்கத்தவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஊ,ந,பொ.நி.சபை 1995 ஆம் ஆண்டு கிளை வலைப்பின்னலொன்றை அறிமுகப்படுத்தியது.
“தொழில்வழங்குநர்” என்ற பதம் வேலை வழங்குகின்ற எந்தவொரு நபர் அல்லது பிற வேறு நபர்கள் சார்பாக எந்தவொரு வேலையாளரையும் வேலைக்கமர்த்து கின்றவர் தொழில்தருநர் அமைப்பொன்றினை உள்ளடக்குகின்றவர் (அத்தகைய அமைப்பு தாபனம், கம்பனி, கூட்டுத்தாபனம் அல்லது தொழிற் சங்கமொன்று) மற்றும் பிற வேறு நபர்கள் சார்பாக எந்தவொரு வேலை யாளரையும் வேலைக்கமர்த்துகின்றவர், ஏதேனும் எழுதப்பட்ட சட்டம், சட்ட உரித்தாளர், சட்டப் பின்னுரிமையாளர், நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி மற்றும் கம்பனியொன்றினை ஒழித்துக்கட்டுநரின் கீழ் அரசாங்கத்தில் உரித்தளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தகமொன்றின் தகுதிவாய்ந்த அதிகாரி அத்துடன் கூட்டிணைக்கப்படாத அமைப்பு என்கின்றவிடத்து தவிசாளர் அல்லது அத்தகைய அமைப்பின் செயலாளர் மற்றும் பங்குடமையொன்றாகவிருக்கின்றவிடத்து முகாமைத்துவ பங்காளி அல்லது முகாமையாளர் ஆகியோரைக் கருதுகின்றது.
“ஊழியர்” என்ற பதம் வேலைக்குள் நுழைந்துள்ள அல்லது தொழில் வழங்குநருடனான ஒப்பந்தமொன்றின் கீழ் ஒப்பந்தம் தெரிவிக்கப்பட்டு அல்லது உட்கிடக்கை மூலமோ அல்லது வாய்மூலமோ அல்லது எழுத்து மூலமோ எந்தப் பதவியிலும் வேலையாற்றுகின்ற எந்தவொரு நபரும் மற்றும் அது சேவை ஒப்பந்தமாகவோ அல்லது பயிலுநர் ஒப்பந்தமாகவோ அல்லது தொழிலில் எந்த வேலையையும் நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ஒப்பந்தமாகவோ அத்துடன் அத்தகை ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் சாதாரணமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள எந்தவொரு நபரையும், அத்தகைய நபர் ஏதேனும் குறித்த நேரத்தில் தொழிலிலிருக்கின்ற அல்லது தொழிலில் இல்லாமையை உள்ளடக்குகின்றது என்பதைக் கருதுகின்ற
”உழைப்புகள்” என்பது ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் (பிரிவு 47) வரையறுக்கபட்ட அதனை ஒத்தததாக ஊ.ந.பொ.நி கணிக்கப்படுகின்றபோது பின்வருகின்ற கொடுப்பனவுகள் மற்றும் படிகள் கவனத்தில் கொள்ளப்படும்.
|
ஆண்டின் முதல் அரைப் பகுதி | – உரிய ஆண்டின் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர் |
ஆண்டின் இரண்டாவது அரைப் பகுதி | – எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர் |