தொழில் வழங்குநர்களின் விபரங்கள்

“தொழில்வழங்குநர்” என்பது எவரேனும் தொழிலாளிக்கு வேலை​ வழங்குகின்ற எவராவது ஆளொருவர் அல்லது வேறு ஆட்கள் சார்பாக எவரேனும் தொழிலாளரை வேலைக்கமர்த்தும்  ஆளொருவர் கருதப்படுவார். அதற்குள்  தொழில் வழங்கும் நிறுவனமொன்றும்  (வியாபார நிறுவனம், கம்பனி, கூட்டுத்தாபனம், உள்ளூராட்சி சபை அல்லது தொழிற் சங்கமொன்று) உள்ளடங்கும். அவ்வாறே வேறு நபர்கள் சார்பாக எவரேனும் தொழிலாளரை வேலைக்கமர்த்துகின்றவரும் கருதப்படுவார்.  ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு  பொறுப்பளிக்கப்பட்ட ஏதேனும் வர்த்தகமொன்றின் உரிய அதிகாரி, சட்ட உரித்தாளர், சட்டப் பின்னுரிமையாளர், நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி மற்றும் கம்பனியொன்றை  ஒழித்துக்கட்டுநர் அத்துடன் கூட்டிணைக்கப்படாத நிறுவனமாக உள்ள விடத்து  தவிசாளர் அல்லது அத்தகைய நிறுவனத்தின் செயலாளர் மற்றும் பங்குடமையொன்றாக உள்ள போது முகாமைத்துவ பங்காளி அல்லது முகாமையாளர் கருதப்படுவார்.

“ஊழியர்” என்பது வேலைக்குள் நுழைந்துள்ள அல்லது தொழில் வழங்குநருடனான ஒப்பந்தமொன்றின் கீழ் ஒப்பந்தம் தெரிவிக்கப்பட்டு அல்லது உட்கிடையாகவோ அல்லது வாய்மூலமோ அல்லது எழுத்து மூலமோ எந்தப் பதவியிலும் வேலையாற்றுகின்ற எந்தவொரு நபரும் மற்றும் அது சேவை ஒப்பந்தமாகவோ அல்லது பயிலுநர் ஒப்பந்தமாகவோ அல்லது தொழிலில் எந்த வேலையையும் நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ஒப்பந்தமாகவோ அத்துடன் அத்தகை ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் சாதாரணமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள எந்தவொரு நபரையும், அத்தகைய நபர் ஏதேனும் குறித்த நேரத்தில் தொழிலிலிருக்கின்ற போது அல்லது தொழிலில் இல்லாத போதிலும் அத்தகைய நபரைக் குறிக்கும்..

தகைமை மற்றும் பங்களிப்புத் தொகை செலுத்தல்

அரசாங்கத் திணைக்களங்களில் ஓய்வூதியத்தைக் கொண்டுள்ள பணியார்கள் தவிர்ந்த வர்த்தகத்தின் தன்மை மற்றும் வகைப்பாடு தொடர்பில் ஒரு பணியாளரை மாத்திரம் கொண்டுள்ள தொழில் வழங்குநர் ஒருவரும் பங்களிப்புத் தொகை செலுத்துவதற்கு சட்டத்தினால் கட்டுப்பட்டுள்ளார்.  அரசாங்க கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் தனியார் துறை அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை  செலுத்தும் கடப்பாடு  உடையன.

பங்களிப்புத் தொகை செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்கள்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தொழில் வழங்குநர்கள்

விதிவிலக்குகள்

பங்களிப்புத் தொகைகளை கணித்தல்

ஒவ்வொரு தொழில் வழங்குநரும் ஒவ்வொரு ஊழியருக்கும் பங்களிப்புத் தொகையை செலுத்தும் பொறுப்பினைக் கொண்டிருக்கின்றனர். தொழில் வழங்குநர் எவரும்  ஊழியரொருவரின் வருமானங்கள்/வேதனங்களிலிருந்து பங்களிப்புத் தொகையைக் கழித்தலாகாது.

ஊழியர் ஒருவரது மொத்த உழைப்பு

மொத்த உழைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குதல் வேண்டும்

தொழில் வழங்குநரின் பங்களிப்புத் தொகை

மொத்த மாதாந்த வருமானத்திலிருந்து 3% (ஊழியரின் மொத்த வேதனங்கள்/ சம்பளங்களிலிருந்து கழித்தலாகாது)