ஊழியரொருவர் அவரது தொழிலின் முதல் நாளிலிருந்து ஊ.ந.பொ.நிதியத்தில் அங்கத்துவத்தை பெறுவதற்கு உரித்துடையவர். ஊழியர் சார்பில் ஊ.ந.பொ.நி அனுப்ப வேண்டியது தொழில்வழங்குநரனது பொறுப்பாகும். அத்தோடு அவ்வாறு செய்யத் தொழில்வழங்குநரைத் தூண்டுவது ஊழியரினதும் பொறுப்பாகும்.
அங்கத்துவத்திற்கு தகுதியானவர்கள் யார் ?
தொழிலின் தன்மையென்பது ஏற்புடையதன்று. அனைத்து ஊழியர்களும் அவர்கள் நிரந்தர, தற்காலிக, பயிலுநர், அமைய மற்றும் மாற்றல்முறை வேலையாளர் களாயினும் அவர்கள் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள். துண்டு வீதம், ஒப்பந்த அடிப்படை, வேலையின் செயற்பாட்டின் அடிப்படை அல்லது பிற வேறு முறையில் எவ்வாறிரிப்பினும் அங்கத்துவத்திற்கு உரித்துடையவர்கள்.
அங்கத்துவத்திற்காக நிரப்பப்படவேண்டிய படிவங்கள்
ஊ.சே.நிதியத்தைப் போன்று அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள படிவங்களை நிரப்பவேண்டிய தேவை இல்லை. ஒரு தடவை ஊ.சே.நிதியத்தில் பதிவுசெய்துள்ள ஊழியர் ஒருவர் அந்த ஊ.சே.நி. இலக்கத்திற்கு பங்களிப்புத் தொகைகளை அனுப்ப முடியும். தமது தனிப்பட்ட சேமலாப நிதியத்தைக் கொண்டிருக்கின்ற தொழில்வழங்குநர்கள் தனிப்பட்ட சேமலாப நிதியத்தின் இலக்கங்களின் கீழ் பங்களிப்புத் தொகைகளை அனுப்ப முடியும்.