ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை நியதிச்சட்ட நிறுவனமொன்றாகும். இது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. இந்தி நிதியத்தின் மூலம் செயலுக்கமுள்ள அங்கத்தவர்களுக்கு நலன்புரி நன்மைகள் வழங்கப்படுகின்றன.
அங்கத்துவத்தைப் பெறுவதற்கு பூரணமாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் முதல் மாத பங்களிப்புத் தொகையுடன் ஊ.ந.பொ.நிதியத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படுதல் வேண்டும். மாதாந்த பங்களிப்புத்தொகை 200/- ரூபா அல்லது அதற்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.
அங்கத்துவ விண்ணப்பப்படிவங்கள் ஊ.ந.பொ.நி சபையின் தலைமை அலுவலகத்தில், கிளை அலுவலகங்களில் அல்லது இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மாதாந்த கொடுப்பனவு தொடர்ந்து வருகின்ற மாதத்தின் இறுதி நாளன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படுதல் வேண்டும்.
உதாரணமாக, ஏப்பிரல் மாதத்திற்கான பங்களிப்புத் தொகையினை மே மாதம் 31 ஆம் திகதி வரை செலுத்த முடியும். |
ஆம்.நீங்கள் அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு அல்லது ஆண்டுக்கான தங்களது பங்களிப்புத்தொகையினை முன்கூட்டியே செலுத்த முடியும். |
இல்லை.நலத்திட்ட தொகைகள் அங்கத்தவரினால் செய்யப்படுகின்ற கொடுப்பனவில் தங்கியிருக்கவில்லை.
இல்லை. நீங்கள் அனைத்து நன்மைகளையும் அனுபவித்துள்ள போதிலும், விலகு கின்ற போது அங்கத்தவர் வைப்பிலிடப்பட்டுள் அனைத்துப் பணத்தினையும் வட்டியுடன் பெற்றுக்கொள்ள முடியும் |
சுயவேலைவாய்ப்பிலீடுபட்டுள்ள நபர்கள் மற்றும் குடிபெயர் வேலையாளர்களை தமது எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதே எமது நோக்காகும்.
கொடுப்பனவுகள் மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளினூடாக பணமாகச் செலுத்த முடியும்.காசோலைகள் தபாலின் மூலமாகவும், ஊ.ந.பொ.நிதியின் வெளிக்கள அலுவலர்களிடம் பணமாக கையளிக்கலாம் அல்லது நிலையியற் கட்டளையை உங்களது வங்கிக்கு வழங்குவதனூடாக செலுத்த முடியும். அங்கத்துவத்தைப் பெற்றதன் பின்னரே மக்கள் வங்கியின் கிளைகளினூடாக பங்களிப்புத் தொகையினை வைப்பிலிட முடியுமென்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். பணத்தினைச் செலுத்தும்போது வங்கி சிட்டையின் மீது உங்களது அடையாள அட்டை இலக்கத்தையும் , உங்களது பெயரையும் எழுதுவதற்கு மறக்க வேண்டாம்.(மக்கள் வங்கியின் எமது நடைமுறைக் கணக்கு இலக்கம் 119100180000287) |
காசோலைகள் “ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை” என்ற பெயரிற்கு எழுதப்படுதல் வேண்டும்.
முன்னைய அங்கத்தவர்களும் புதிய அங்கத்தவர்களாக மீள இணைய முடியும்.