ஊ.ந.பொ.நி உதவிதொகை செலுத்துவதற்காக ஊ.சே.நிதியத்திற்காக பதிவுசெய்யப்பட்ட அதே இலக்கத்தைப் பயன்படுத்தல் வேண்டும். ஊ.சே.நிதியத்துடன் பதிவுசெய்யாத தொழில் வழங்குநர்கள் மற்றும் தனியார் சேமலாப நிதியங்களைக் கொண்டிருக்கின்றவர்கள் ஊ.ந.பொ.நிதியத்திலிருந்து தனியான இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடிமென்பதுடன் அந்த இலக்கத்திற்கு பங்களிப்புத் தொகைகளை அனுப்பவும் முடியும்.
அங்கத்துவ இலக்கங்களை அங்கத்தவர்களுக்கு வழங்குவது தொழில் வழங்குநர்களின் முக்கிய பொறுப்பாகும்.
முதலாவது ஊழியருக்கு இலக்கம் 01 வழங்கப்படுதல் வேண்டும். இரண்டாவது ஊழியருக்கு இலக்கம் 02 வழங்கப்படுதல் வேண்டும்.
ஊழியரின் அங்கத்துவ இலக்கம் தொழில்வழங்குநர்களின் ஊ.சே.நி பதிவு இலக்கம் மற்றும் ஊழியரின் இலக்கத்தை உள்ளடக்குகின்றது.
உ.ம். தொழில்வழங்குநர் இலக்கம். A 85000
ஊழியர் இலக்கம். 01
ஊழியர் அங்கத்துவ இலக்கம். 85000/A/01
உங்களது தாபனத்திலிருந்து ஊழியர் ஒருவர் விலகி பின்னர் மீண்டும் இணைந்திருந்தால் அவருக்கு புதிய இலக்கத்தினை வழங்குவதற்கு அறிவுறுத்தப்படுகின்றது.அந்தப் ஊழியர் தனது பங்களிப்புத் தொகைகளைப் பெற்றிருந்தால் அவருக்கு புதிய இலக்கத்தினை வழங்குவதற்கு பணிக்கப்படுகின்றது.
ஒரே இலக்கத்தினை இரு பணியாளர்களுக்கு வழங்குதல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய தவறொன்று இடம்பெற்றிருக்கின்றவிடத்து அது பற்றி ஊ.ந.பொ.நி சபைக்கு அறிவித்து அதனை காலதாமதமின்றித் திருத்துதல் தொழில்வழங்குநரின் பொறுப்பாகும். ஊ.ந.பொ.நி சபை இத்தகைய தவறுகளுக்கான பொறுப்பை ஏற்காது. தொழில்வழங்குநர் அனைத்துக் கடிதங்களிலும், அனுப்புகைகளிலும் ஊ.சே.நி இலக்கத்தினை எப்போதும் குறிப்பிடுதல் வேண்டும் என்பதுடன் தொலைபேசி இருப்பின் அதன் இலக்கத்தினையும் குறிப்பிடுதல் வேண்டும். |
தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் ஒவ்வொரு பங்களிப்புத் தொகை திரட்டுப் படிவத்திலும் தெளிவாக எழுதப்படுதல் வேண்டும்.பெயர் பிழையாக அனுப்பப்பட்டிருப்பின், தேசிய அடையாள அட்டையின் ஒளிப்படப் பிரதியொன்றுடன் சரியான பெயரை தொழில்வழங்குநரால் உறுதிப்படுத்துகின்ற கடிதத்துடன் கொழும்பு – 05, தொழில் செயலகம், ஊ.ந.பொ.நி.சபையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உரிய பிரிவிற்கு அனுப்புதல் வேண்டும்.
பங்களிப்புத்தொகைகள் R1 அனுப்பும் படிவத்தில் அனுப்பப்படுகின்றபோது, அங்கத்தவர்களின் விபரங்கள் படிவம் II திரட்டுக்களில் ஒவ்வொரு ஆறு மாதமும் அங்கத்தவர் கணக்குகள் ( பெரிய வகை) முகாமையாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
உதவுதொகைகள் R4 அனுப்பும் படிவத்தில் அனுப்பப்படுகின்றபோது அங்கத்தவர் கணக்குகள் (சிறிய வகை) முகாமையாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
பெயர்,பழைய தேசிய அடையாள அட்டையின் இலக்கம் மற்றும் புதிய தேசிய அடையாள அட்டையின் இலக்கம் மற்றும் மாற்றத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்தி தொழில்வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் அனுப்பப்படுதல் வேண்டும்.இதற்கு மேலதிகமாக, தேவைப்படுகின்றவிடத்து கிராம அலுவலர் அல்லது ஆட்பதிவாளரிடமிருந்து எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் அவசிய மானதாகும். தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் மாற்றம் முரண்பாடாக உள்ள போது உரிய ஆவணங்கங்கள் வேண்டுகோளுடன் அனுப்பப்படுதல் வேண்டும். |
ஊ.ந.பொ.நிதியத்திலுள்ள தேசிய அடையாள அட்டையின் இலக்கமும் அங்கத்தவரினால் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இலக்கமும் ஒன்றாகவிருத்தல் வேண்டும்.
ஆண்டிறுதி மீதியியைக் குறிப்பிட்டு தொடர்ந்து வருகின்ற ஆண்டில் விபரக்கூற்று ஒன்று வழங்கப்படுகின்றது.
ஒரு ஊழியர் தனது பணிகளை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து ஊ.ந.போ.நிதிக்கு உறுப்புரிமைப் பெறுகின்றார். ஊ.ந.பொ. நிதியத்தில் ஊழியரை இணைப்பது தொழில் வழங்குநரின் பொறுப்பாகும். அவ்வாறே இது தொடர்பில் தொழில்வழங்குநரை அறிவுறுத்துவது பணிக்கமர்த்தப்படும் ஊழியரினதும் கடமையாகும்
வேலையின் தன்மை கருத்திற்கொள்ளப்படமாட்டாது. அனைத்து நிரந்தர, தற்காலிக, பயிலுநர், அமய அல்லது நேர மாற்று தொழிலாளர்களும் இணைந்துகொள்ள முடியும். அத்தோடு, துண்டு வீத, ஒப்பந்த, தரகு அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், என எந்தவொரு பணியாளருக்கும் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
EPF போலன்றி, அங்கத்தவர்களின் கணக்குகள் ஊ.ந.பொ. நிதியத்தில் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. அங்கத்தவர்கள் ஊ.ந.பொ. நிதியத்தில் பல கணக்குகளை வைத்திருக்கலாம் ஆயினும் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான மீளப் பெறும் படிவங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.