ஆண்டின் இறுதியில் வருடாந்த வட்டி மற்றும் பங்கிலாபம் ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தவரின் கணக்கிற்கும் வரவு வைக்கப்படும். வருடாந்த வட்டி, அவரது கணக்கு மீதி போன்ற விபரங்களைக் கொண்டிருக்கின்ற அங்கத்துவ கணக்கு விபரக்கூற்று, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அங்கத்தவருக்கு வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகைக் கொடுப்பனவினை தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அல்லது குறித்த ஆண்டு காலப்பகுதியில் 5 மாதங்களுக்கு இடைஇடையே செலுத்துவதற்கு எந்தவொரு அங்கத்தவரும் தவறுவாராயின் உரிய ஆண்டுக்கான வட்டி மற்றும் பங்கிலாபத்திற்கான அவரது உரித்துடைமையை இழப்பர்.
நலன்களுக்கான வேண்டுகோள்,உரிய படிவத்தனை சுயதொழில் பிரிவில் வழங்கலாம், பிராந்திய அலுவலகங்களில் அல்லது மாவட்ட அலுவலகங்களில் அல்லது வெளிக்கள அலுவலர்களினூடாக கையளிக்கலாம். நன்மைகளுக்கான கொடுப்பனவு நன்மைகள் நிருவாகப் பிரிவினால் விதிக்கப்படும் நிபந்தனைக்குட்பட்ட தாகும்.
தற்போது நடைமுறையிலுள்ள நன்மைகளாவன, தன்னியக்கமான வாழ்க்கைக் காப்புறுதி (ஆகக்கூடிய தொகை 100,000/- ரூபா உச்சமாக), நிரந்தர மானதும் முழுவதுமான இயலமைக்கான நன்மைகள் ( 200,000/- ரூபா உச்சமாக), இருதய சிகிச்சைக்கான நிதி உதவி (ஆகக்கூடிய தொகை 300,000/- ரூபா), சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான நிதி உதவி (300,000/- ரூபா),கண்ணில் (Intra Ocular Lens) வில்லைபொருத்துவதற்கான பணத்தை மீளப்பெறுவதற்கு (ஒவ்வொன்றுக்கும் தலா 15,000/- ரூபா) என்பவையாகும்.ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 9000 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா 15,000/- வழங்கப்படும்.வைத்தியசலையில் தங்கியிருந் தமைக்கான மருத்துவ காப்புறுதித் திட்டம் வருடாந்தம் ஆகக்கூடியது 25,000/-. ரூபாவிற்மைவானதாகும்.அங்கத்துவ காலப்பகுதியில் பெறக்கூடிய ஆகக்கூடிய இந்தத் தொகை 50,000/-,ரூபாவாகும்.