நியதிச்சட்ட நன்மைகள்

நிதியத்தின் மீதியை வட்டி மற்றும் பங்கிலாபத்துடன் மீளப்பெறுதல்

நிதியத்தின் மீதியைக் கோருவதற்கு கட்டாய வயதொன்றினைப் பூர்த்தி  செய்வதற்கு ஊழியர் சேமலாப நிதியம் தேவைப்படுத்துகின்றபோதிலும், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது நிதியத்தின் மீதியைக் கோருவதற்கு குறிப்பிட்ட வயதுவரை காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த ஒழுங்குகளுக்கு பின்வருவன விதிவிலக்கானவையாகும்:

மீளப் பெறல் கோரலைச் செய்வதற்குரிய பொதுவான அறிவுறுத்தல்கள்

அங்கத்தவர்கள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவர்கள் ஐந்து வருட சேவையினைப் பூர்த்திசெய்திருக்கின்ற போதிலும் தற்போதைய தொழில் வழங்குநரிடமிருந்து பங்களிப்புத் தொகை செலுத்தப்படுகின்ற நிதியிலிருந்து மீதியை மீளப்பெறுவதற்கான கோரலைச் செய்யமுடியாது

கோரல்கள் செலுத்தப்படுகின்ற படிமுறைகள்

  • சாதாரணமான முறைமை

    கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகள்  மற்றும் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்ளைச் சமர்ப்பித்துள்ள போது அதற்கு உட்பட்ட வகையில்  கோரல் 21 வேலை நாட்களுக்குள் செலுத்தப்படுகின்றது.

  • விசேட முறைமை

    அவசர நிலைமை உதாரணமாக வேறு நாட்டுக்கு குடிபெயர்தல், நோய்வாய்ப்படல், சத்திர சிகிச்சை, நகை  அடகு மீட்டல், திருமணம், கல்விசார் செலவுகள் போன்ற அத்கைய குடும்பச் செலவினங்கள் போன்றவற்றிற்கு ஆவணரீதியான சான்றுகளை சமரப்பித்துள்ள  போது  14 வேலை நாட்களுக்குள் கோரல்கள் செலுத்தப்படுகின்றன.

  • விரைவான கோரல் முறைமை

    கோரல்கள், இரண்டு வேலை நாட்களுக்குள் செலுத்தப்படுதல் வேண்டும்.கோரல்ளை ஏற்பதற்கு முன்னர் பங்களிப்புத் தொகைகள் மற்றும் அறிக்கைகள் சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.  கோரல்களின் பெறுமதியின் அடிப்படையில் ஒவ்வொரு கோரலுக்கும் அலுவலக சேவைக் கட்டணமொன்று அறவிடப்படும்.

கோரலின் பெறுமதி   கட்டணம்
ரூபா. 200,000.00 வரை
ரூபா. 1,000.00
ரூபா. 200,000.00 இலிருந்துரூபா 1,000,000.00 வரை
ரூபா. 2,000.00
ரூபா. 1,000,000.00 இற்கு மேல்
ரூபா. 3,000.00

இந்த அடிப்படையில் நாளொன்றிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் கோரல்களின் எண்ணிக்கை 65 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மேலும், நிதிக் கோரல் விண்ணப்பங்ளை சபையின் ஏனைய பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் கையளிக்க முடியும்.