தலைவர்

Mr. D.L.P. Rohana Abeyaratne

தவிசாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை

  ☏  +94 11 7747201
  🖷  +94 11 2503917
        ✉︎  chairman@etfb.lk   

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையானது, 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து தொழில் அமைச்சின் கீழ் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. தற்போது நிதி, பொருளாதாரம், மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றது

இந்த நிதியத்தின் முக்கிய பண்பு யாதெனில், அனைத்து தனியார் மற்றும் அரசுசார்புத் துறை தொழில்வழங்குநர்கள் தமது ஊழியர்களுக்கு பங்களிப்புச் செய்யும் நிதியத்திலிருந்து அவர்கள் தொழில் புரியும் காலப்பகுதியில் அவர்களுக்கு ஒரு தொடர் சமூக, நலன்புரி நன்மைகளை நடைமுறைப்படுத்துவதாகும். அனைத்து தனியார் மற்றும் அரசுசார்துறை தொழில்வழங்குநர்கள் தமது ஊழியர்களின் மொத்த வேதனத்தின் 3% ஐ நிதியத்திற்கு பங்களிப்புத்தொகையாகச் செலுத்துகின்றனர். வழங்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகளின் விசேட தன்மை யாதெனில், எந்தவொரு சமூக, நலன்புரி நன்மைகளையும் வழங்குவதற்காக அங்கத்தவர்களின் மீதியிலிருந்து மீளப்பெறப்படுவதில்லை என்பதாகும். மேலும், அங்கத்தவர் ஓய்வுபெறுகையில் அல்லது தொழில் மாற்றப்பட்டால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தமக்கு வரவு வைக்கப்பட்டுள்ள மீதிப்பணம் முழுவதையும் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நிதியமானது 79,000 தொழில் வழங்குநர்களினால் பணிக்கமர்த்தப்பட்டுள்ள சுமார் 2.6 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிதியத்தின் பெறுமதி 339 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது.

இந்த சபையின் முன்னேற்றமானது, கடந்த சில வருட காலப்பகுதியில் சேகரிப்புகள், முதலீட்டு வருமானங்கள், மிகை விதிப்பு வருமானம், நிதியத்தின் வளர்ச்சி ஏனையவை உள்ளடங்கலாக குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அதற்கிணங்க 2019 ஆம் ஆண்டு சகல அங்கத்தவர்களுக்கும் மொத்த பங்கிலாம் மற்றும் வட்டி வீதங்களின் மொத்தத்தை 8% ஆக வெளியிடுவதற்கு சபைக்கு இயலுமாகியது. அனைத்து முக்கிய தொழிற்பாடுகளும் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் நாடளாவியரீதியில் தொழிற்படுகின்ற 19 பிராந்திய அலுவலகங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது.

சபையின் மொத்த பதவி ஆளணியினர் சுமார் 1046 பேரில் அதிகமானவர்கள் இளைமையான வளவாளர்களாக  உள்ளனர்.  அது சபையின் செயற்பாடுகளை பயனுறுதிவாய்ந்த முறையில் கையாள்வதற்கு உதவுகின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் மிகவும் பலமுடன் அங்கத்தவர்களுக்கு சேவையாற்றுவதே எமது  திடமான எதிர்பார்ப்பாகும்.


தவிசாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபை